தற்போதைய வங்கி வாடிக்கையாளர்களில் 50 சதவீதம் பேர் வரும் 2015 ஆம் ஆண்டுக்குள் மொபைல் வழி தங்கள் வங்கி நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள் என மொபைல் வழி நிதி சேவை நிறுவன அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் ரிசர்வ் வங்கி மொபைல் வழி மேற்கொள்ளக் கூடிய நிதி பரிமாற்றத்திற்கான ஒரு நாள் உச்ச வரம்பை ரூ.5,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பலர் மொபைல் வழி பேங்கிங் முறைக்கு மாறுவார்கள் என இவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது வங்கிகளில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 20 கோடியை எட்டியுள்ளது.
மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
0 comments :
Post a Comment