சோஷியல் நெட்வொர்க்கிங் 2 சிம் போன்

பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வாழும் இளைஞர்கள் இன்று தங்கள் நண்பர்களுடன் எந்த நேரத்திலும் தகவல்கள், ஆசை, அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.

போகிற போக்கில் இதனை மேற்கொள்ள மொபைல் போனில் இந்த வசதிகள் எந்தக் குறையுமின்றி கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர். இவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் இலக்குடன் பிளை மொபைல்ஸ் நிறுவனம் Fly LINKZ (E145) என்னும் போனை வடிவமைத்து விற்பனைக்கு தந்துள்ளது.

இந்த போனில் 240 x 400 ரெசல்யூசனுடன் வண்ணத்திரை பளிச் என உள்ளது. 2 எம்பி கேமரா 1600 x 1200 ரெசல்யூசனில் படங்களைத் தருகிறது. போட்டோ ஸ்லைட் �ஷா வசதியும் உண்டு.

மோஷன் சென்சார் கேம்ஸ், வீடியோ மற்றும் ஆடியோ ரெகார்டிங் பிளேயர், வால்யூம் இயக்க மட்டும் கீகள், 3.5 மிமீ ஆடியோ ஜாக்,எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர், கையில் எழுதினால் புரிந்து இயங்கும் டெக்ஸ்ட் வசதி, 1000 முகவரி கொள்ளும் அட்ரஸ் புக், 2000 எஸ்.எம்.எஸ். கொள்ளும் மெமரி, போட்டோ மற்றும் வீடியோ அழைப்பு வசதி, எண்களை அழைக்கவிடாமல் தடுக்கும் வசதி, பல மத விழா காட்டும் காலண்டர், ஸ்டீரியோ புளுடூத், மொபைல் ட்ரேக்கர், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, பெர்சனல் கம்ப்யூட்டர் இணைத்து இயக்கும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.

சோஷியல் நெட்வொர்க் தளங்களை எளிதாக அணுகவும், இன்ஸ்டண்ட் மெசேஞ்சர்களை இயக்கவும் Nimbuzz அப்ளிகேஷன் தரப்பட்டுள்ளது. Skype, Windows Live Messenger (MSN), GTalk, Yahoo!, AIM, MySpace, ICQ ஆகியவற்றில் இயங்க சப்போர்ட் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெறப்படும் லைவ் காண்டாக்ட் லிஸ்ட் மூலம் ஆன்லன் மற்றும் ஆப் லைனில் இருப்பவர்கள், பிசியாக உள்ளவர்கள், மெசஞ்சர் விண்டோவில் இருந்து விலகி உள்ளவர்களைக் காட்டுகிறது. Twitter, Facebook, Picasa, Flickr and Google Calendar ஆகியவற்றுடன் எளிதாக இணைப்பு கொள்ள Snaptu தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு லேட்டஸ்ட் ஸ்கோர், ராய்ட்டர்ஸ், பி.பி.சி., நியூ யார்க் டைம்ஸ்,யாஹூ மற்றும் பல தளங்களில் இருந்து அந்த நேரத்திய செய்திகளை அறியலாம். இந்த போனின் குறியீட்டு விலை ரூ. 5,509.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes