56வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் திரைப்பட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த இயக்குனருக்கான விருது தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாலாவுக்கு வழங்கப்பட்டது.
அவர் இயக்கிய "நான் கடவுள்' படத்துக்காக இந்த விருது கிடைத்துள்ளது. 2008ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ஒளிப்பதிவாளர் வி.கே.மூர்த்திக்கு வழங்கப்பட்டது. விருதுடன் 10 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
இந்திய திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது ஒளிப்பதிவாளர் ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறை.
"பேஷன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பிரியங்கா சோப்ராவுக்கும், சிறந்த நடிகர் விருது உபேந்திரா லிமயேவுக்கும் (ஜோக்வா-மராத்தி படம்), சிறந்த துணை நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும் (பேஷன்), சிறந்த துணை நடிகர் விருது ராம்பாலுக்கும் (ராக் ஆன்), சிறந்த பின்னணி பாடகர் விருது ஹரிஹரனுக்கும், சிறந்த பின்னணி பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கும், சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது ஷாம் பட்டேலுக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் 69 பிரிவுகளின் கீழ் பதக்கங்கள், ரொக்கம் உள்பட 130 விருதுகள் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment