பிசினஸ் ஸ்மார்ட் போன் வாங்க விரும்புவோருக்கு நோக்கியா இ71 ஒரு கவர்ந்திழுக்கும் போனாகும். ஆனால் அவ்வளவு பணம் செலவழிக்க பட்ஜெட் இல்லாதவர்களுக்கு அண்மையில் நோக்கியா ஒரு வழி தந்துள்ளது.
ஏறத்தாழ அதே வசதிகளைக் கொண்ட தன் நோக்கியா இ63 போனின் விலையைக் குறைத்துள்ளது. முழு குவெர்ட்டி கீ போர்டு கொண்ட தொடக்க நிலை ஸ்மார்ட் போனாக இந்த போன் உள்ளது. 2008ல் அறிமுகப்படுத்தபடுகையில் இதன் விலை ரூ.15,199. நோக்கியா சென்ற டிசம்பரில் இதன் விலையைரூ. 10,990 ஆகக் குறைத்துள்ளது.
சந்தைக்கு வந்து பல மாதங்கள் ஆனாலும், ஒரு ஸ்மார்ட் போன் என்ற வகையில் இப்போது வருகின்ற போனில் உள்ள அனைத்து வசதிகளையும் இது கொண்டுள்ளது. இது கொண்டுள்ள வசதிகளைப் பார்க்கலாம்.
போன் அளவு 113 x 59 x 13 மிமீ. இதன் எடை 126 கிராம். குவெர்ட்டி கீ போர்டு; 2.36 அங்குல வண்ணத்திரை. உறுதியான வெளிக் கட்டமைப்பு; இதன் பேட்டரி யை எடுத்து மாற்றுவது மிக எளிது. வழக்கமாக மற்ற போன்களில் ஏற்படும் எந்த பிரச்னையும் இல்லை. கீ போர்டு எளிதாக டெக்ஸ்ட் அமைக்கும் வகையில் இடம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த ஜி.எஸ்.எம். போன், ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், மற்றும் 3ஜி தொழில் நுட்பங்களை சப்போர்ட் செய்கிறது. A2DP இணைந்த புளுடூத், வை–பி, யு.எஸ்.பி. வசதிகளும் தரப்பட்டுள்ளன.
இதன் மெமரி 128 எம்பி என்பதால் அப்ளிகேஷன்கள் மிக வேகமாக இயங்கத் தொடங்கி செயல்படுகின்றன. மெமரியை கார்ட் மூலம் 8 ஜிபி வரை நீட்டிக்கலாம். குயிக் ஆபீஸ், அடோப் ரீடர் மற்றும் ஆக்டிவ் நோட் ஆகியவை தரப்பட்டுள்ளன. சர்ச் அப்ளிகேஷன் போனில் மட்டுமின்றி வெப்சைட் களிலும் செயல்படுகிறது.
பிசினஸ் பணிகளுக்குத் தேவையான எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்.,இன்ஸ்டண்ட் மெசஞ்சர்,இமெயில், புஷ் மெயில், எம்.எஸ். எக்சேஞ்ச் சர்வர் ஆகியவை உள்ளன.
எம்பி3 மியூசிக் பிளேயர் பல பார்மட்களை (MP3, AAC, eAAC, eAAC+, WMA and WAV) சப்போர்ட் செய்கிறது. பிசினஸ் போன் என்றாலும் இசை வெளிப்பாடு மிகவும் இனிமையாக உள்ளது.
எப்.எம். ரேடியோ உள்ளது. இதன் கேமரா 2.0 மெகா பிக்ஸெல் திறனுடன் எல்.இ.டி. பிளாஷ் மற்றும் சீமாஸ் சென்சார் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வீடியோக்கள் விநாடிக்கு 30 பிரேம்கள் வேகத்தில் இயங்குகின்றன. இ 71 போனில் தரப்பட்டுள்ள 1500 ட்அட பேட்டரி இதிலும் தரப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் நோக்கியா ஸ்மார்ட் போன் வாங்க விரும்புவர்கள் இதனை ஒரு முறை எண்ணிப் பார்க்கலாம்.
0 comments :
Post a Comment