தன் காலக்ஸி ஸ்மார்ட் போன் மூலம், மொபைல் உலகில் முதல் இடத்தினை வேகமாகப் பிடித்து வெற்றி கண்ட, சாம்சங் நிறுவனம், தற்போது தகவல் தொடர்பு உலகம் எதிர்பார்த்த காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.
ஐந்து அங்குல அகலத்தில் இதில் தரப்பட்டுள்ள சூப்பர் AMOLED தொடு திரை, இதன் புதிய சிறப்பாகும். இதன் டிஸ்பிளே 1080x1920 பிக்ஸெல்களில் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அடுத்த புதிய வரவாகும். மைக்ரோ சிம் கொண்டு இதனை இயக்கலாம்.
வழக்கம் போல டச் விஸ் யூசர் இன்டர்பேஸ் மல்ட்டி டச் வசதியுடன் இதில் இயங்குகிறது. வை-பி டைரக்ட், வை-பி ஹாட் ஸ்பாட் என இரண்டு வகை நெட்வொர்க் தொடர்புகள், பயனாளர்களுக்கு தகவல் தொடர்பினை எளிதாக்குகின்றன.
A2DP இணைந்த புளுடூத், அண்மைக் களத்தகவல் தொடர்பு தரும் என்.எப்.சி., இன்ப்ரா ரெட் போர்ட் ஆகியவை இதன் மற்ற நெட்வொர்க் சிறப்பம்சங்கள்.
இதன் அடுத்த சிறப்பு இதில் தரப்பட்டிருக்கும் 13 எம்.பி. திறன் கொண்ட கேமரா. ஆட்டோ போகஸ், எல்.இ.டி.பிளாஷ், டூயல் ஷாட், ஒரே நேரத்தில் ஹை டெபனிஷன் வீடியோ மற்றும் இமேஜ் ரெகார்ட் செய்திடும் வசதி, ஜியோ டேக்கிங், டச் போகஸ், முகம் மற்றும் சிரிப்பு உணர்ந்து இயங்கும் வசதி ஆகியவை கொண்டதாக இந்த கேமரா வடிவமைக்கப் பட்டுள்ளது.
டூயல் வீடியோ ரெகார்டிங் வசதி கொண்டுள்ளது. இதன் செயல்பாட்டுக்கு குவார் கோர் 1.6 கிகா ஹெர்ட்ஸ் கோர்டெக்ஸ் சிப் ஈடு கொடுக்கிறது. இதில் பலவகையான சென்சார்கள் தரப்பட்டு இயங்குகின்றன.
எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், ஆர்.எஸ்.எஸ். ஆகிய தொடர்புகள் கிடைக்கின்றன. அடோப் பிளாஷ் மற்றும் எச்.டி.எம்.எல். 5 திறன் கொண்ட பிரவுசர் இயக்கம் கிடைக்கிறது.
ஆனால், இதில் ரேடியோ இல்லை. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், இமேஜ் வீடியோ எடிட்டர், வேர்ட், எக்ஸெல், பி.டி.எப். பைல்களைப் படிக்க டாகுமெண்ட் வியூவர், கூகுள் சர்ச், மேப்ஸ் மற்றும் ஜிமெயில், யு ட்யூப், காலண்டர், கூகுள் டாக், பிகாஸா ஆகிய கூகுள் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2600mAh திறன் கொண்ட தாக உள்ளது.
இதன் விலை ரூ.44,000 முதல் ரூ.45,000 வரை, பல இணைய தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. தவணை முறையிலும் இந்த போனை வழங்கிட பல விற்பனை மையங்கள் முன்வந்துள்ளன.
0 comments :
Post a Comment