மைக்ரோசாப்ட் தைவான் கார்ப்பரேசன், தன்னுடைய லைவ் மெசஞ்சர் சேவையை வரும் ஏப்ரல் 8ல் மூட இருக்கிறது. இதனை இதுவரை பயன்படுத்தி வந்தவர்கள், ஸ்கைப் புரோகிராமிற்கு மாறிக் கொள்ளலாம்.
பயனாளிகளின் அக்கவுண்ட்கள், தானாக ஸ்கைப் தள சேவைக்கு மாற்றப்படும்.
ஸ்கைப் சேவையினை விண்டோஸ், மேக், ஐ.ஓ.எஸ்., விண்டோஸ் போன் மற்றும் அனைத்து ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் பெறலாம். ஜூலை 1999ல், மெசஞ்சர் ஆன்லைன் சேட் வசதி தொடங்கப்பட்டது.
வேகமாக வளர்ந்து இந்த சேவை, 2011ல் உச்சத்தைத் தொட்டது. அப்போது 30 கோடி வாடிக்கையாளர்கள் இந்த சேவையை நாள்தோறும் பயன்படுத்தி வந்தனர். தற்போது 10 கோடி பேரே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மைக்ரோசாப்ட், ஸ்கைப் நிறுவனத்தை வாங்கிய போது, மாதந்தோறும் 28 கோடி பேர் பயன்படுத்தினர். மைக்ரோசாப்ட், ஸ்கைப் நிறுவனத்தினை 850 கோடி டாலர் கொடுத்து வாங்கியது.
இந்த வகையில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் பிரிவில், லைவ் மெசஞ்சரால், பேஸ்புக், லைன், விசேட் ஆகியவற்றுடன் போட்டியிட முடியாமல் போனது என்றே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
0 comments :
Post a Comment