சென்ற அக்டோபரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 ஸ்டோரில், ஒரு லட்சம் அப்ளிகேஷன்கள் விரைவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
மூன்றே மாதங்களில் இந்த எண்ணிக்கை எட்டப்படும் எனக் கூறப்பட்டாலும், ஐந்து மாதங்களில் 50,000 என்ற இலக்கையே இந்த ஸ்டோர் எட்டியுள்ளது.
இருப்பினும், இதுவும் ஒரு சாதனையே. நவம்பர் மாதத்தில், அப்ளிகேஷன் களின் எண்ணிக்கை 20,000 ஆக வேகமாக வளர்ந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும், ஏறத்தாழ 500 அப்ளிகேஷன்கள் தளத்தில் இடம் பெற்று வந்தன.
ஆனால், அதன் பின்னர், சற்று தொய்வு ஏற்பட்டது. ஜனவரி வரையில், இதன் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கூட எட்டவில்லை. பிப்ரவரி மாதத்தில், தினந்தோறும் பெற்ற அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே இருந்தது.
தற்போது இது மொத்தத்தில் 50 ஆயிரத்தை எட்டியுள்ளது.
ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் சாதனங்களுக்கான ஆப்பிள் ஸ்டோர்களுடன் ஒப்பிடுகையில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 ஸ்டோர் மிகப் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது.
ஆனால், முந்தைய இரண்டும் வெகுகாலமாக இயங்கி, பக்குவப்பட்ட நிலையை அடைந்துள்ள ஸ்டோர்களாகும்.
மேலும், விண்டோஸ் 8 பயன்பாட்டினைக் காட்டிலும், ஆண்ட்ராய்ட் மற்றும் மேக் ஓ.எஸ். சிஸ்டங்களின் பயன்பாடு வெகுவாகப் பரவிய நிலையில் உள்ளன.
ஆனாலும், விண்டோஸ் 8 சிஸ்டம் தொடர்ந்து தன்னை நிலைப் படுத்திக் கொண்ட நிலையில், என்றாவது ஒரு நாள், விண்டோஸ் 8 ஸ்டோர், மற்ற இரண்டு ஸ்டோர்களின் நிலையை எட்டும் என்றே கருதப்படுகிறது.
0 comments :
Post a Comment