சோனி எக்ஸ்பீரியா E என்ற மொபைல் போன் ஒன்றை, ரூ.10,999 என விலையிட்டு சோனி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஐஸ்கிரீம் சாண்ட்விச் பதிப்பு 4.0.4 தரப்பட்டுள்ளது.
இதனை மேம்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 113.5 x 61.8 x 11 மிமீ. எடை 115.7 கிராம். பார் டைப் போனாக வடிவமைக்கப்பட்டு, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் இதில் தரப்பட்டுள்ளது.
அதிக பட்சம் இரண்டு விரல் தொடு உணர்வுகளுக்கு இயங்குகிறது. கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இதன் திரை 3.5 அங்குல அகலம் உடையது. 320x480 பிக்ஸெல்களில் டிஸ்பிளே காட்டுகிறது.
லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம் 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஸ்டோரேஜ் 4 ஜிபி, 512 எம்.பி. ராம் நினைவகம், நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர். எஸ்., எட்ஜ் மற்றும் வை-பி, யு.எஸ்.பி. தொழில் நுட்பம், ஜியோ டேக்கிங் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
3.15 எம்பி திறனுடன் இயங்கும் கேமரா கிடைக்கிறது. இசைப் பிரியர்களுக்கு, மியூசிக் பிளேயர் மற்றும் ஸ்டீரியோ ரேடியோ தரப்பட்டுள்ளன.
எஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் வசதிகள் பயனாளரை எப்போதும் தொடர்பில் இயங்க வழி தருகிறது.
டாகுமெண்ட் வியூவர் பைல்களைப் பார்க்கவும் உருவாக்கவும் உதவுகிறது. இதே போல போட்டோ வியூவர் வசதியும் கிடைக்கிறது.
இதில் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ-5 ப்ராசசர் இயங்குகிறது. குவால்காம் ஸ்நாப் ட்ராகன் சிப்செட் போனுக்கான இயக்கத்தினைத் தருகிறது.
இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் பேட்டரி 1530 mAh திறனுடன் இயங்குகிறது. இதனால், தொடர்ந்து 6 மணி 12 நிமிட நேரம் பயன்படுத்தலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 530 மணி நேரம் மின் சக்தி தங்குகிறது.
சென்ற டிசம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த 3ஜி மொபைல் போன், தற்போது அனைத்து இந்திய விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது.
0 comments :
Post a Comment