ஸிங்க் குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனம், முதன் முதலாக மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது. புதியதாக ஆறு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.
இவை அனைத்தும் இரண்டு சிம்களில் இயங்கக் கூடியவை ஆகும். இவை Zync C18, Zync C21, Zync C22, Zync C24, Zync C27 மற்றும் Zync C30 என அழைக்கப்படுகின்றன.
இவற்றின் விலை முறையே ரூ. 1,399, ரூ.1,990, ரூ.1,990, ரூ. 1,990, ரூ.1,990 மற்றும் ரூ. 2,499 ஆகும். இவை அனைத்தும் கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.
இவற்றில் 4 ஜிபி மைக்ரோ எஸ்.டி. மெமரி கார்ட், யு.எஸ்.பி. இணைப்பு வழி, புளுடூத் வசதி, டூயல் எல்.இ.டி. டார்ச் லைட் போன்ற பல வசதிகள் உள்ளன.
1.3 எம்பி திறன் கொண்ட கேமரா வீடியோ எடுக்கும் வசதியுடன் உள்ளது. மியூசிக் பிளேயர் தரப்படுகிறது.
எப்.எம். ரேடியோ கிடைக்கிறது. அனைத்து போன்களும் பேஸ்புக், யாஹூ, எம்.எஸ்.என் மெசஞ்சர் ஆகியவற்றை சப்போர்ட் செய்கின்றன.
இவற்றில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இயங்குகிறது. கீ போர்ட் பின்புல வெளிச்சத்துடன் உள்ளது.
கேம், அலாரம், கால்குலேட்டர், வேர்ல்ட் கிளாக், பல பார்மட்களில் உள்ள இமேஜ் சப்போர்ட் ஆகிய கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவெங்கும் 500 டீலர்கள் கொண்ட கட்டமைப்பை இந்த நிறுவனம் மொபைல் விற்பனைக்கு உருவாக்கியுள்ளது.
51 நகரங்களில் இவர்கள் இயங்குகின்றனர். இவை தவிர இந்த மொபைல் போன்களை, ஆன்லைன் வர்த்தக தளங்களும் விற்பனை செய்கின்றன.
0 comments :
Post a Comment