கூகுள் மெயில் - சில தேடல் வழிகள்


கூகுள் தரும் ஜிமெயிலில் உள்ள கடிதங்களில், பல வேளைகளில் நாம் சில மெயில்களைத் தேடிப் பெற வேண்டியதிருக்கும். 

குறிப்பிட்ட நபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற மெயில்கள், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்கள், சில சொற்கள் அடங்கிய மெயில்கள், சில தலைப்புகளில் வந்த மெயில்கள் எனப் பலவகைகளில் நாம் தேடலை மேற்கொண்டு தகவல் விடைகளைப் பெற முயற்சிப்போம். 

நாம் தேடுகையில் அதற்கான பல வரையறைச் சொற்களைப் பயன்படுத்தி, நம் தேடல்களின் முடிவுகளை விரைவாகப் பெறலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

from: குறிப்பிட்ட நபரிடமிருந்து வந்துள்ள மெயில்களை மட்டும் பெற. எ.கா.from: kannan:கண்ணன் என்பவரிடமிருந்து வந்த மெயில்கள் மட்டும் காட்ட.

to:நாம் அனுப்பிய மெயில்களில், குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட. 
எ.கா: to:kannan.கண்ணன் என்பவரிடமிருக்கு (நீங்களோ அல்லது மற்றவர்கள், அந்த மெயிலைப் பயன்படுத்தி) அனுப்பப்பட்ட மெயில்களை மட்டும் காட்ட.

subject: மெயில்களில் உள்ள சப்ஜெக்ட் கட்டத்தில் உள்ள சொற்களில் தேடிப் பெற. எ.கா.subject:dinner சப்ஜெக்ட் வரியில் உள்ள சொற்களில் “dinner” என்ற சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட.

OR:இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அதனைத் தேடி, அச்சொல் உள்ள மெயில்களை மட்டும் காட்ட. எ.கா. from:kannan OR from:lakshmi.கண்ணன் அல்லது லஷ்மி என யாரிடமிருந்தும் வந்த மெயில்களைக் காட்ட. 

இதில் இந்த கட்டளைச் சொல் OR எப்போதும் கேபிடல் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். 

(hyphen): குறிப்பிட்ட சொல் உள்ள கடிதங்களைக் காட்டாமல் இருக்க. எ.கா. dinner movie:கடிதங்களில், என்ற சொல் மட்டுமே உள்ளவை. அவற்றில் movie என்ற சொல் இருந்தால் அது தேவையில்லை.

label: குறிப்பிட்ட ஒரு லேபில் கொண்ட கடிதங்களில் மட்டும் தேட. எ.கா.from:kannan label: myfamily; myfamily என்ற லேபிலில் உள்ள கடிதங்களில், kannan அனுப்பிய கடிதம் மட்டும். 

has:attachment: அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டவும். எ.கா. from:kannan has:attachment: இங்கு கண்ணனிடமிருந்து வந்த மெயில்களில், அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும். 

list: குறிப்பிட்ட மெயிலிங் லிஸ்ட்டில் இருந்து பெற்ற மெயில்கள் மட்டும். எ.கா. list:info@example.com. info@example.com என்ற சொற்களை ஹெடரில் பெற்ற மெயில்கள் மட்டும். அதாவது இந்த மெயிலிங் லிஸ்ட்டிலிருந்து பெற்ற மற்றும் அந்த லிஸ்ட்டுக்கு அனுப்பப்பட்ட மெயில்கள் மட்டும். 

filename: இணைக்கப்பட்ட, குறிப்பிட்ட பைல் அல்லது பைல் வகையினைப் பெற. எ.கா.filename:physicshomework.txt “physicshomework.txt” என்ற அட்டாச்மெண்ட் உள்ள மெயில்கள் மட்டும். label:work filename:pdf: “work” என்ற லேபில் இடப்பட்டு, பி.டி.எப். பைல் அட்டாச்மெண்ட் ஆக உள்ள மெயில்கள் மட்டும். 

“ "(மேற்கோள் குறிகள்): இந்த குறிகளுக்குள் இடப்பட்ட டெக்ஸ்ட் உள்ள மெயில்கள் மட்டும் காட்டப்பட. எ.கா. “i’m feeling lucky”: “i’m feeling lucky” என்ற சொற்களை உடைய மெயில்கள் மட்டும். இந்த தேடலில் பெரிய, சிறிய எழுத்து வித்தியாசம் பார்க்காமல் தேடப்படும். எடுத்துக் காட்டாக இந்த தேடலில் “I’m feeling lucky” எனச் சொற்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் காட்டப்படும். 

இன்னொரு எடுத்துக் காட்டினையும் இங்கு பார்க்கலாம். subject:”dinner and a movie” என்று கொடுத்தால், சப்ஜெக்ட் கட்டத்தில், “dinner and a movie” என்ற சொற்கள் உள்ள மெயில்கள் மட்டும் என்று பொருள். 

in:anywhere: பொதுவாக நாம் கொடுக்கும் தேடல்கள் வினாக்கள், இன் பாக்ஸில் மட்டும் தேடிக்கொடுக்கப்படும். அவ்வாறு இல்லாமல், Spam மற்றும் Trash பெட்டிகளில் உள்ள மெயில்களிலும் தேடப்பட வேண்டும் எனில், கட்டளை வரியை இவ்வாறு அமைக்க வேண்டும். 

எடுத்துக்காட்டு: in:anywhere movie: All Mail, Spam,மற்றும் Trash ஆகிய அனைத்திலும் “movie” என்ற சொல் உள்ள மெயில்களைத் தேடித் தா என்பது இதன் பொருள்.

cc: இந்த இரு பீல்டுகளிலும் உள்ளதைத் தேடு என்பது பொருள். எடுத்துக்காட்டாக, cc:kannan எனக் கொடுத்தால், கண்ணனுக்கு என்ற பீல்ட் வழி கொடுக்கப்பட்ட மெயில்களை மட்டும் தேடிக் காட்டு என்பது பொருள். இதே போல் bcc:என்ற பீல்டுக்காகவும் தேடலாம்.

after:before: குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பப்பட்ட மெயில்களைக் காட்டு என்பது இதன் பொருள். எடுத்துக்காட்டு after:2004/04/16 before:2004/04/18: 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 லிருந்து 18 வரை அனுப்பப்பட்ட மெயில்கள்.

is:chat: இந்தக் கட்டளை சேட் மெசேஜ்களில் மட்டும் தேடலுக்காகப் பயன்படுத்தப்படும். எடுத்துக் காட்டாக எனக் கொடுத்தால், சேட் மெசேஜ்களில் “monkey” என்ற சொல் பயன்படுத்தப்படும் மெசேஜ் மெயில்களை மட்டும் காட்டவும்.


1 comments :

Krishna at January 8, 2013 at 11:20 PM said...

FINE EXPLANATION WITH SUPER EXAMPLES.
THANKS

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes