தன்னுடைய சூப்பர்போன் கேன்வாஸ் ஏ 100, மக்களிடையே வெற்றி பெற்றதை அடுத்து, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சூப்பர் போன் கேன்வாஸ் 2 என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதே 5 அங்குல கெபாசிடிவ் தொடு திரையுடன் உள்ள இந்த போனில், டூயல் கோர் சிபியு தரப்பட்டுள்ளது. விலை அதே முந்தைய போனின் விலைதான்.
இதனுடைய வடிவமைப்பு காலக்ஸி நெக்சஸ் போனை ஞாபகப்படுத்துகிறது. வழக்கம் போல சற்று எடை அதிகமாகவும், தடிமன் கூடுதலாகவும் உள்ளது. 147x76.5x9.7 மிமீ என்ற அளவில் இதன் பரிமாணம் உள்ளது.
வழக்கமான இன்டர்பேஸ் மற்றும் அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன. இரண்டு சிம்களை நம் இஷ்டப்படி நிர்வகிக்க முடிகிறது. இரண்டு சிம்களும் ஒரே நேரத்தில் இயங்குகின்றன.
அழைப்பு, இன்டர்நெட், மெசேஜ் என நாம் விரும்புபவற்றை, ஒரு சிம் கார்டுக்கென ஒதுக்கலாம். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரம் அமைத்து, அப்போது போனை அணைத்திடும் வசதி தரப்பட்டுள்ளது.
இதன் உள் நினைவகம் 4 ஜிபி.இதனை ஸ்மார்ட் கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். எம்பி 4 பைல்கள் சிறப்பாக இயக்கப்படுகின்றன.
லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம்.ரேடியோ ஆகியவை தரப்பட்டுள்ளன. 3ஜி வசதி இருந்தாலும், அலைவரிசை ஒதுக்கீட்டினால், உலகின் சில நாடுகளில் இதனைப் பயன்படுத்த முடியாது.
வைபி, புளுடூத், யு.எஸ்.பி. ப்ளக் அண்ட் பிளே ஆகிய வசதிகள் உள்ளன. பிளே ஸ்டோர், எம் ஸ்டோர், எம் ஸோன் ஆகியவை சப்போர்ட் செய்யப்படுகின்றன. டாகுமெண்ட் வியூவர், ஆர்கனைசர், கூகுள் சர்ச் மேப்ஸ், ஜிமெயில், யுட்யூப், காலண்டர், கூகுள் டாக், வாய்ஸ் மெமோ, டயல் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இதன் சிறப்பான அம்சம், ஆட்டோ போகஸ் மற்றும் 8 எம்.பி திறனுடன் இயங்கும் கேமராதான். டூயல் எல்.இ.டி. பிளாஷ் இயங்குகிறது. வீடியோ பதிவும் சிறப்பாக உள்ளது.
இதன் 2000mAh பேட்டரி திறன் கொண்டது. தொடர்ந்து 180 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. 5 மணி நேரம் தொடர்ந்து பேச பயன்படுத்த முடிகிறது. இதன் கதிர்வீச்சு வேகம் 0.68 W/kg என அறிவிக்கப்
பட்டுள்ளது.
0 comments :
Post a Comment