கொரியாவைச் சேர்ந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தன் காலக்ஸி சாதனங்களை ஒருகோடிக்கும் மேலாக விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் காலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமானது.
தொடர்ந்து காலக்ஸி எஸ்2, காலக்ஸி எஸ்3 , காலக்ஸி நோட், காலக்ஸி நோட் 2 மற்றும் காலக்ஸி ஒய் ஆகியவை இந்த வரிசையில் வெளியிடப்பட்டன.
இவை ஒவ்வொன்றும் என்ன எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டன என்ற தகவலை சாம்சங் இந்தியா வெளியிடவில்லை.
காலக்ஸி ஒய், காலக்ஸி நோட் மற்றும் காலக்ஸி எஸ்3 ஆகியவை இந்த விற்பனையில் 50% பங்கினைக் கொண்டிருந்தன.
மொத்தம் 13 மாடல்களை காலக்ஸி வரிசையில் சாம்சங் வெளியிட்டுள்ளது. இவற்றின் விலை ரூ.6,790 முதல் ரூ.39,990 வரையில் உள்ளன.
0 comments :
Post a Comment