விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முடிவு காலத்திற்கு இன்னும் 500 நாட்கள் கூட இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில், மிக அதிக காலம், 11 ஆண்டுகள், செயல்பட்ட எக்ஸ்பி சிஸ்டத்தின் பயன்பாடு முடக்கப்பட உள்ளது.
வரும் 2014 ஏப்ரல் 8ல் இதற்கான இயக்க ஆதரவினை மைக்ரோசாப்ட் நிறுத்திக் கொள்ளும். மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களில், இன்னும் எத்தனை நாட்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு இயக்க உதவி கிடைக்கும் என்று காட்டும் காலக் கடிகாரத்தை இயக்கி வருகின்றன.
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பயனாளர்களை வழி நடத்தும், பிரிட்டனைச் சேர்ந்த இச்ட்தீணிணிஞீ என்னும் நிறுவனம் தன் இணைய தளத்தில் (http://camwood.com /news/thecountdownstartstodaywith500daystogobusinessesmustpreparefortheendofxp/) இது போன்ற கடிகாரம் ஒன்றை இயக்கி வருகிறது.
மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கைவிடும் நாளன்று, அந்த சிஸ்டத்தினை 12 ஆண்டுகள் ஐந்து மாதங்கள் இயக்கி இருக்கும். இதற்கு முன்னர், விண்டோஸ் என்.டி. சிஸ்டத்தினை 11 ஆண்டுகள் 5 மாதங்கள் இயக்கி நிறுத்தியது.
எக்ஸ்பிக்கு அதிக நாள் தன் சப்போர்ட்டை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. இதற்குக் காரணம், எக்ஸ்பிக்குப் பின்னர் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விஸ்டா, பயனாளர்களிடையே பல்வேறு குறைபாடுகளால் எடுபடாமல் போனதுதான்.
சென்ற மாதம் வரை, எக்ஸ்பி பயன்படுத்தும் பயனாளர்கள், பன்னாட்டளவில் 40.7% ஆக இருந்து வந்தனர். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு, சென்ற ஆகஸ்ட் மாதம் தான், எக்ஸ்பி பயன்பாட்டினை முந்தியது. தற்போது இதன் பயனாளர்கள், 44.7% ஆக உள்ளனர்.
விஸ்டா பயன்படுத்துவோர் 5.8% மட்டுமே. ஏப்ரல் 2014 தான் இறுதி மாதமாக இருக்கும் என்று தொடர்ந்து மைக்ரோசாப்ட் எச்சரித்து வருகிறது. தன் வாடிக்கையாளர் அனைவரையும், விண்டோஸ் 7க்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால், மைக்ரோசாப்ட் சப்போர்ட் நிறுத்தப்பட்ட பின்னரும், பல லட்சக்கணக்கானவர்கள், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத் துவார்கள் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 27% முதல் 29% வரை இருப்பார்கள் என்றும் கணக்கிட்டுள்ளனர்.
உங்கள் கம்ப்யூட்டரிலும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தின் இறுதி இயக்க நாள் குறித்த எச்சரிக்கை கடிகாரம் ஓட வேண்டும் என விரும்பினால், http://www.nestersoft.com/timeleft/ என்ற முகவரியில் இதற்கான கடிகார அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
0 comments :
Post a Comment