நோக்கியா தன் லூமியா 920 சூப்பர் போனை தீபாவளி கொண்டாட்ட விற்பனைக்குக் கொண்டு வர இயலாமல் போய்விட்டது. ஆனால், தன்னிடம் இருந்து ஏதேனும் சிறப்பாக எதிர்பார்த்த தன் வாடிக்கையாளர்களுக்கு, நல்லதொரு அறிவிப்பினை வழங்கியது.
41 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்கப்பட்ட தன் 808 பியூர்வியூ மொபைல் போன் விலையை ரூ.25,000க்குக் குறைத்துள்ளது. முன்பு இதன் விலை ரூ.32,100 ஆக இருந்தது.
சென்ற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்த மொபைல் போன் ஒரு சிம்பியன் சிஸ்டம் கொண்ட போனாகும். சென்ற 2012 மொபைல் உலகக் கருத்தரங்கில், சிறந்த புதிய மொபைல் போன் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றது.
இதன் சிறப்பான கேமரா, மற்ற எஸ்.எல்.ஆர்.கேமராக்களுடன் வைத்து பார்க்கும் அளவிற்குச் சிறப்பாக இயங்குகிறது. மிகச் சிறப்பான கேமரா அமைந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் வாங்கத் திட்டமிடுபவர்கள், இதனையும் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம். saholic.com என்ற வணிக இணைய தளம் தான், முதன் முதலில் இதன் குறைந்த விலை விற்பனையைக் காட்டியது. இந்த மொபைல் நான்கு அலைவரிசைகளில் இயங்குகிறது.
இதன் பரிமாணம் 123.9x60.2x13.9 மிமீ. எடை 169 கிராம். இதன் திரை AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன். கொரில்லா கிளாஸ் 4 அங்குல திரை டிஸ்பிளே சிறப்பாக உள்ளது. இதில் பின்பக்கமாக 41 எம்.பி. திறன் கேமராவும், முன் பக்கமாக வி.ஜி.ஏ.கேமராவும் உள்ளன. இதன் உள் நினைவகம் 16 ஜிபி. சிஸ்டம் நினைவகம் 1 ஜிபி. ராம் நினைவகம் 512 எம்பி.
மைக்ரோ எஸ். டி. கார்ட் மூலம் நினைவகத்தினை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
வைபி, A2DP இணைந்த புளுடூத் 3.0., என்.எப்.சி. என்னும் அண்மைக் களத் தகவல் பரிமாற்ற வசதி, எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர், எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள், ஆர்கனைசர், டாகுமெண்ட் வியூவர், வீடியோ/போட்டோ எடிட்டர், லவுட் ஸ்பீக்கர், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ்மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய சிறப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.ஐ. போர்ட், யு.எஸ்.பி, ஓ.டி.ஜி. மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்களாகும்.
கருப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போனில் 1400 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், 11 மணி நேரம் தொடர்ந்து பேசலாம்.
ஒருமுறை சார்ஜ் செய்தால், 465 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் கதிர் அலைவீச்சு 1.21 W/kg என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment