ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் மொபைல் போன்களில், சோனியின் எக்ஸ்பீரியா டைபோ ஒயிட், அண்மையில் மக்களைக் கவர்ந்த ஒரு போனாக இடம் பெற்றுள்ளது.
இதில் ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ5 குவால்காம் சிப், போனை இயக்குகிறது.
நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்கும் இந்த போனில், ஒரு ஜி.எஸ்.எம். மினி சிம் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 103 x 57 x 13 மிமீ. எடை 99.4 கிராம்.
பார் டைப் போனாக டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திரை அகலம் 3.2 அங்குலம். மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. திரையின் கிளாஸ் ஸ்கிராட்ச் ஏற்படுவதைத் தடுக்கும் திறன் கொண்டது.
லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், எத்தனை முகவரிகள் வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அட்ரஸ் புக், 2.9 ஜிபி போன் ஸ்டோரேஜ், 512 எம்பி ராம் மெமரி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி தொழில் நுட்பம், வை-பி, AD2P இணைந்த புளுடூத், 3.15 எம்.பி. திறன் கொண்ட கேமரா, வி.ஜி.ஏ. வீடியோ இயக்கம் ஆகியன இதில் தரப்பட்டுள்ளன.
ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் இமெயில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் இயங்குகின்றன.
டாகுமெண்ட்களைப் படித்தறிய வியூவர் தரப்பட்டுள்ளது. ஏஜி.பி.எஸ். சப்போர்ட் உள்ளது. 1500 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் திறனை அளிக்கிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால், 30 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 9,600.
0 comments :
Post a Comment