வெளியானது நோக்கியா ஆஷா 205, ஆஷா 206


இந்திய மொபைல் சந்தையில் நவம்பர் இறுதி வாரத்தில், நோக்கியா நிறுவனம் இரண்டு புதிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

அவை நோக்கியா ஆஷா 205 மற்றும் நோக்கியா ஆஷா 206. இதுவரை நோக்கியா 201 என்ற மொபைல் போன் தான், நோக்கியாவின் குறைந்த விலை போனாக இருந்து வருகிறது. 

இந்த இரண்டு போன்களும் அந்த வகையில், அதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆஷா வரிசையில் ஏறத்தாழ 10 போன்கள் வெளியாகியுள்ளன. இரண்டு மொபைல் போன்களும் இரண்டு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

ஒன்று மற்றும் இரண்டு சிம்களை இயக்கும் வகைகளில் உள்ள இவற்றில், நம் தேவைக்கேற்ற மாடலைத் தேர்ந்தெடுத்து பெறலாம். இரண்டிலும் நோக்கியாவில் சிம்பியன் எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.

நோக்கியா ஆஷா 205 போனின் திரை 2.4அங்குல அகலத்தில் QVGA டிஸ்பிளே திறனுடன் உள்ளது. எளிதாக டைப் செய்திட குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது. பேஸ்புக் இணைய தளத்தினை நேரடியாகப் பெறத் தனி கீ தரப்பட்டுள்ளது. 

0.3 திறன் கொண்ட விஜிஏ கேமரா உள்ளது. இதன் உள் நினைவகம் 64 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். 1000 முகவரிகளை இதில் சேமித்து வைக்கலாம். 

இதன் பரிமாணம் 113x61x13 மிமீ. எடை 94 கிராம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் மூலம் நெட்வொர்க் இணைப்பு தரப்படுகிறது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ பதிவு செய்திடும் வசதியுடன் உள்ளது. 

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் இயக்க முடியும். எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் உள்ளன. தெளிவாக ஒலிக்கும் வகையில் லவுட் ஸ்பீக்கர் உள்ளது. 1020 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 891 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. 11 மணி நேரம் தொடர்ந்து பேச இயலும்.

ஆஷா 206 மொபைல் போனில், வழக்கமான ஆல்பா நியூமெரிக் கீ போர்ட் தரப்பட்டுள்ளது. தடிமன் குறைவாக வடிவமைக்கப்பட்ட இந்த போனில், 1.3 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. 

இதன் மெமரியும் 10 எம்.பி. என்ற அளவில் தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதன் பரிமாணம் 116x49.4x12.4 மிமீ. எடை 91 கிராம். ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் மூலம் நெட்வொர்க் இணைப்பு தரப்படுகிறது. 1100 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.

நோக்கியாவின் இந்த இரண்டு போன்களில் தான், முதன் முதலாக Slam எனப்படும் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் போட்டோ, வீடியோ போன்ற மல்ட்டி மீடியா பைல்களை பக்கத்தில் உள்ள போன்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

பெற்றுக் கொள்ளும் போனில் இந்த தொழில் நுட்பம் இருக்க வேண்டிய அவசியமில்லை. போன்களையும் இணையாக இருக்கும்படி செட் செய்திடத் தேவை இல்லை. இந்த இரண்டு போன்களிலும் Nokia Xpress Browser, Nokia Nearby, eBuddy instant messaging appஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. 

இவை இரண்டும் இந்த மாதத்தில், இந்திய நகரங்கள் எங்கும் படிப்படியாக விற்பனைக்கு வெளியாகின்றன. முதலில் ஆஷா 205, அடுத்து 206 கிடைக்கும். பின்னர், இரண்டு சிம் ஆப்ஷனுடன் போன்கள் வெளி வரும். 

விலை ரூ.3,500 என்ற அளவில் இருக்கும். இந்த இரண்டு போன்களுடனும் 40 கேம்ஸ் இலவசமாக வழங்கப்படுகின்றன.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes