1991 ஆம் ஆண்டு வெளியானது முதல், விண்ஸிப் பயன்பாடு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஓர் அங்கமாக மாறிவிட்டது.
பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்புவதற்கும், விரித்துப் படிப்பதற்கும், விண்ஸிப் அப்ளிகேஷன்கள் பெரும் பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதே நிறுவனம், விண்ஸிப் சார்ந்து ஸிப் ஷேர் மற்றும் ஸிப் சென்ட் (ZipShare, ZipSend) ஆகிய சேவைகளையும் வழங்குகிறது.
iOS மற்றும் Android சிஸ்டங்களுக்கான விண்ஸிப் வெளியான நிலையில், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்திற்குமான விண்ஸிப் வெளியாகியுள்ளது.
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கென வெளியாகியுள்ள பைல்களைக் கையாளும் முதல் அப்ளிகேஷன் இதுதான்.
பைல்களைப் பாதுகாப்பாகச் சுருக்கி அனுப்பவும், விரித்துச் செயல்படுத்தவும் இது உதவுகிறது.
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கேற்ப, தொடு திரை செயல்பாட்டில் இயங்குகிறது. 128 அல்லது 256 பிட் ஏ.இ.எஸ். என்கிரிப்ஷன் தொழில் நுட்பத்தினை இது பயன்படுத்துகிறது.
பேஸ்புக் சமூக இணைய தளத்திற்கான பைல் ஷேர் பயன்பாட்டிற்கு ZipShare உதவுகிறது.
மிகப் பெரிய பைல்களை அனுப்ப ZipSend உதவுகிறது. மேலதிகத் தகவல்களுக்கு http://www.winzip.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
0 comments :
Post a Comment