கம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப் படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை. இவை மற்ற பைல்களிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப் படுவதில்லை.
இவை எதற்காக எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரிந்து கொண்டால் கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த மர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம். இந்த பைல்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்து புரோகிராமர்கள் தான் கட்டாயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
இருப்பினும் இவை மிக முக்கியமான வகை பைல்கள் என்பதால் இவை குறித்து நாம் நிச்சயம் ஓரளவிற்காவது அறிந்திருக்க வேண்டும். எனவே கீழே கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சாராத ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
ஒரு டி.எல்.எல். பைல் அந்த கோப்பின் துணைப்பெயரான DLL என்பதை வைத்து அடையாளம் காணலாம். இது குறித்து பல விளக்கங்கள் தரப்பட்டாலும் மைக்ரோசாப்ட் தன் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது சுருக்கமாகவும் அதன் முக்கிய தன்மையினையும் காட்டுவதாக உள்ளது. ஒரு டைனமிக் லிங்க் லைப்ரேரி பைலில் மற்ற டி.எல்.எல். அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைலின் செயல்பாடுகளை இயக்கும் புரோகிராம் வரிகள் எழுதப்பட்டிருக்கும்.
புரோகிராமர்கள் ஒரு டி.எல்.எல். பைலில் சில குறியீட்டு வரிகளை அமைக்கின்றனர். இந்த குறியீடுகள் திரும்ப திரும்ப மேற்கொள்ள வேண்டிய சில செயல்களுகானவை. குறிப்பிட்ட சில செயல்களை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளத் தேவையான குறியீடுகள் இவை.
ஒரு எக்ஸிகியூட்டபிள் (.EXE) பைல் போல டி.எல்.எல். பைல்களை நேரடியாக இயக்க முடியாது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற எக்ஸிகியூட்டபிள் அல்லது டி.எல்.எல். பைல்களின் குறியீடுகளே இன்னொரு டி.எல்.எல். பைலின் குறியீடுகளை இயக்க முடியும்.
இதனை இன்னொரு வழியாகவும் காணலாம். டி.எல்.எல். பைல்கள் ஒரு செயலை மட்டும் மேற்கொள்ளும் பைல் தொகுப்புகள்.இதனை வெவ்வேறு புரோகிராம்களில் குறிப்பிட்ட செயலினை மேற்கொள்ள தேவைப்படுகையில் இøணைத்து இயக்கலாம். இதனால் கம்ப்யூட்டர் செயல்பாடு எளிதாகிறது.
கம்ப்யூட்டரில் நாம் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறோம். வேர்ட் ப்ராசசர், இன்டர்நெட் பிரவுசர், ஸ்ப்ரெட் ஷீட், பிக்சர் மேனேஜர், கிராபிக்ஸ் டிசைனர், பேஜ் மேக்கர் என இவற்றின் வேலைத் தன்மை மொத்தமாக வேறுபடுகின்றன. ஆனால் இவை அனைத்திலும் சில குறிப்பிட்ட செயல்பாடுகள் பொதுவான தன்மையானùதாய் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக பைலை திறத்தல், மாற்றங்களை அப்டேட் செய்தல், ஒரு பைலில் மேல் கீழ் செல்லல், அழித்ததைப் பெறல், அழித்தல், அறவே நீக்குதல் என நிறைய வேலைகளை பொது வேலைகளாகக் காட்டலாம். இந்த வேலைகள் பெரும்பாலான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்குகையில் மேற்கொள்ள வேண்டிய திருக்கும். இந்த வேலைகளுக்கு ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிலும் அதற்கான குறியீடுகளை எழுதி அமைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அது புரோகிராமரின் உழைப்பின் நேரத்தை வீணாக்குவதாக அமையும்.
இவற்றைப் பொதுவாக மேற்கொள்ளும் வகையில் சிறிய புரோகிராம் பைல்களில் அமைத்து அவற்றை தேவைப்படும் போது மெயின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராமில் இருந்து இயக்கினால் எளிதாக வேலை அமைவதுடன் தேவையற்ற திரும்ப திரும்ப ஒரு பணிக்காக பல இடங்களில் வேலை மேற்கொள்வது குறையும்.
இந்த பொதுவான வேலைகளுக்காக அமைக்கும் பைல்களே டி.எல்.எல். பைல்கள். இந்த பைல்கள் மொத்தமாக ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் போல ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தேக்கி வைக்கப்படுகின்றன. அவற்றை மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் எடுத்து பயன்படுத்துகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பயன்படுத்த முடியும்.
இங்கு சில முக்கியமான டி.எல்.எல். பைல்களையும் அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதனையும் காணலாம்.
COMDLG32.DLL: இது டயலாக் பாக்ஸ்களை கண்ட்ரோல் செய்கிறது.
GDI32.DLL: இந்த பைல் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. கிராபிக்ஸ் வரைகிறது. டெக்ஸ்ட்டைக் காட்டுகிறது. எழுத்து வகைகளை நிர்வகிக்கிறது.
KERNEL32.DLL: இதில் நூற்றுக் கணக்கான செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக மெமரியினை நிர்வாகம் செய்வது அவற்றில் முக்கியமான ஒன்று. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்கான பல வகையான யூசர் இன்டர்பேஸ்களை இது கையாள் கிறது. புரோகிராம் விண்டோக்களை அமைப்பதில் துணை புரிகிறது. அதன் மூலம் பயனாளர்களுக்கு இடையே செயல் படுகிறது.
இவ்வாறு பொதுவான செயல்பாடுகளுக்கென பொதுவான டி.எல்.எல். பைல்கள் இருப்பதால் தான் விண்டோஸில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களும் ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் அமைகின்றன. அனைத்து வகையான அப்ளிகேஷன் செயல்பாடுகளை தரப்படுத்துவதில் இந்த டி.எல்.எல். பைல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இதனால்தான் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில்விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவரின் பாராட்டைப் பெற்ற ஆதரவு பெற்ற சிஸ்டமாக இடம் பிடிக்க முடிந்தது. விண்டோஸுக்கு முன் டாஸ் என்னும் இயக்கம் இருந்தது.
அதனைப் பயன்படுத்தியவர்கள் நினைவு கூர்ந்தால் எப்படி ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் ஒரு மாதிரியான முகப்பு கிடைத்தது என்பதனை உணர்வார்கள். அது விண்டோஸ் வந்தவுடன் மாறிவிட்டது. அதற்குக் காரணம் இந்த டி.எல்.எல். பைல்களே.
1 comments :
DLL பற்றி இன்றுதான் சரியாகத் தெரிந்துகொள்கிறேன். நன்றி..
Post a Comment