பெரும்பாலானவர்கள் யாஹூ தளம் சென்று பார்க்கும் வழக்கத்தினைக் கொண்டிருக்கலாம். வித்தியாசமாக, இந்த இணைய தளத்தின் பெயரில் தான் ஓர் ஆச்சரியக் குறி அமைந்துள்ளது. அதில் என்ன ஆச்சரியம் என்று யாராவது எண்ணியதுண்டா?
சென்ற வாரம், நான் இந்த யோசனை யுடன் அதன் ஆச்சரியக் குறியை நோக்கிக் கர்சரை நகர்த்தினேன். கர்சர் ஏதோ லிங்க் இருப்பது போல மாறியது. ஏன் இப்படி? என்ற ஆச்சரியத்துடன் கிளிக் செய்தேன்.
உடனே ""யா ஆ ஆ ஆ ஹூ, ஹூ கு ஹூ'' என உரத்த குரலில் ஒரு சத்தம் ஸ்பீக்கரில் கேட்டது. இது என்னடா வம்பு? எனச் சுற்று முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் அதே போல கிளிக் செய்தேன்.
மீண்டும் அதே உரத்த குரலில் ""யா ஆ ஆ ஆ ஹூ, ஹூ கு ஹூ'' என்று யாரோ கூவும் குரல் கேட்டது. மீண்டும் மீண்டும் அழுத்த அதே குரல் ஓங்காரமிட்டு கேட்டது.
சற்று யோசித்த பின்னரே, அந்த லிங்க் உள்ள இடத்தில் ஒரு ஆடியோ பைல் தொடர்பு கொடுக்கப்பட்டு அது பிளே ஆகிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.
நீங்களும் இதனைக் கிளிக் செய்து பாருங்கள். நீங்கள் செல்ல வேண்டிய முகவரி www.yahoo.com. இந்தியாவிற்கான யாஹூ தளம் இல்லை. நீங்கள்www.yahoo.com என பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டினாலும் அது இந்திய யாஹூ தளத்திற்குத்தான் (http://in.yahoo. com/?p=us) செல்லும்.
உடனே அதன் வலது பக்கம் உள்ள Go to yahoo.com என்பதில் கிளிக் செய்தால், உங்களுக்கு www.yahoo.com தளம் கிடைக்கும். பின்னர், ஆச்சரியக் குறியில் கிளிக் செய்திடவும்.
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். மொஸில்லா பயர்பாக்ஸ், கூகுள் குரோம் ஆகிய பிரவுசர்களில் இது செயல்படுகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படவில்லை.
சோதனை செய்து குரலை கேட்க ஆவலாயுள்ளவர்கள், சீக்கிரம் கிளிக் செய்து பாருங்கள். ஏனென்றால், சத்தமில்லாமல் இதனை அறிமுகம் செய்த யாஹூ, சொல்லாமலேயே இதனை எடுத்துவிடலாம்.
0 comments :
Post a Comment