கூகுள் நிறுவனம் ஆப்பிளுக்குப் போட்டியாக மியூசிக் கடை திறந்தது குறித்து சென்ற வாரம் தகவல் தரப்பட்டது. அந்த கடைக்கான விளம்பரப் பாடல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.
இதனை யு-ட்யூப் தளத்தில் http://www. youtube.com/watch?v=NI8rQEHoE24&feature=player_embedded#!என்ற முகவரியில் பார்க்கலாம்.
பழைய முறையில் பாடல்கள் நமக்கு எப்படி கிடைத்தன என்று காட்டி, இப்போது எவ்வளவு எளிதாக, கூகுள் மியூசிக் ஸ்டோரில் பாடல்களை வாங்கலாம் என்று நம் ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மியூசிக் தளம் ஆண்ட்ராய்ட் மார்க்கட் (Android Markethttps://market.android.com/ music) என்பதுடன் இணைந்து இயங்குகிறது. Music.google.com/about என்ற முகவரியில் இந்த தளத்தில் என்ன என்ன கிடைக்கும் என பட்டியலிடப்பட்டுள்ளது.
இங்கு நூற்றுக்கணக்கான பாடல்கள் இலவசமாக தரவிறக்கம் செய்திடவும், இசைக்கப்பட்டு கேட்கவும் கிடைக்கின்றன.
கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸில் நீங்கள் விரும்பும் பாடல்களைப் பதிந்து வைக்கலாம். இதன் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவற்றைக் கேட்டு ரசிக்கலாம்.
நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கும் பாடல்களை, கூகுள் ப்ளஸ் மூலம், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கேட்டு ரசிக்கலாம்.
1 comments :
அருமையான தகவல் நண்பரே
Post a Comment