பிளாக்பெரி போன்களைத் தயாரித்து வழங்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம், அண்மையில் பிளாக்பெரி போல்ட் 9790 மற்றும் பிளாக்பெரி கர்வ் 9380 என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது.
இவற்றில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான பிளாக்பெரி 7 ஓ.எஸ். இயங்குகிறது. பிளாக்பெரி 9790 தொடுதிரை மற்றும் கீ போர்டுடன் வடிவமைக் கப்பட்டுள்ளது. தொடுதிரையுடன் முதல் முதலாக வந்துள்ள முதல் கர்வ் மொபைல் பிளாக் பெரி கர்வ் 9380.
பிளாக் பெரி 9790 மொபைலில் 480 x 360 பிக்ஸெல் திறனுடன் கூடிய 2.4 அங்குல திரை தரப்பட்டுள்ளது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மற்றும் குவெர்ட்டி கீ போர்ட் உள்ளன. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது.
11.4 மிமீ தடிமனில் இந்த ஸ்மார்ட் போன் உருவாக்கப் பட்டுள்ளது. எடை 107 கிராம். ஆட்டோ போகஸ், எல்.இ.டி.பிளாஷ் கொண்ட 5 எம்பி கேமரா வீடியோ ரெகார்டிங் வசதியுடன் உள்ளது. இதன் ராம் மெமரி 768 எம்.பி. 8 ஜிபி உள் நினைவகம் இயங்குகிறது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
பிளாக் பெரி கர்வ் 9380 ஸ்மார்ட் போனில், 480 x 360 பிக்ஸெல் திறனுடன் கூடிய 3.2 அங்குல திரை தரப்பட்டுள்ளது. தொடுதிரை, ஆப்டிகல் ட்ரேக் பேட், நேவிகேஷன் கீகள் தரப்பட்டுள்ளன. இதன் ப்ராசசர் 806 மெஹா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது.
எல்.இ.டி.பிளாஷ் கொண்ட 5 எம்பி கேமரா உள்ளது. ராம் மெமரி 512 எம்பி. இதன் உள் நினைவகத்தினை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.
இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் அண்மைத் தள தகவல் தொடர்பு எனப்படும் என்.எப்.சி. தொழில் நுட்பம் இயங்குகிறது. விக்கிட்யூட் பிரவுசர் பதிந்து வழங்கப்படுகிறது. வை-பி, புளுடூத், ஏ- ஜிபிஎஸ் உள்ளன.
இவற்றில் டாகுமெண்ட் எடிட்டர், பிடிஎப் டாகுமெண்ட் வியூவர், சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பு ஆகியவை கிடைக்கின்றன. வரும் வாரத்தில் ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் விநியோகஸ்தர்களிடம் இந்த போன்களை வாங்கிக் கொள்ளலாம். விலை அப்போது தெரிய வரும்.
0 comments :
Post a Comment