திடீரென எரியும் ஐ போன்கள்

சென்ற வாரம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்குப் பறந்த விமானம் ஒன்று தரையிறங்கியவுடன், பயணி ஒருவர் வைத்திருந்த ஆப்பிள் ஐ-போன் 4 தீ ஜ்வாலையுடன் எரியத் தொடங்கியது. புகை வரும்போதே பாதுகாப்பு அலுவலர்கள் அதனைக் கண்டறிந்து நெருப்பை அணைத்தனர்.

முதலில் போனிலிருந்து புகை வருவதை உணர்ந்த பாதுகாப்பு அலுவலர்கள் சந்தேகப்பட்டு அதனைப் பறித்தனர். உடன் சிறிய அளவில் அதில் ஜ்வாலை வந்தவுடன் அணைத்தனர்.

யாருக்கும் பிரச்னை ஏற்படவில்லை என்றாலும், இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கும் மொபைல் போன் நிறுவனத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதலாக, இந்த சம்பவம் குறித்த அறிக்கை ஒன்று ஆஸ்திரேலிய அரசின் விமானப் பயணிகள் பாதுகாப்பு அமைப்பிற்கும் அனுப்பப் பட்டுள்ளது.

போனில் பேட்டரி கீழாக வலது பக்கம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விசாரணையும் ஆய்வும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இதே போல இன்னொரு நிகழ்ச்சி பிரேசில் நாட்டில் நடைபெற்றுள்ளது. பாலோ மோட்டா என்பவரின் ஐ போன் திடீரென தீப்பற்றி எரிந்தது. அவரின் முகத்தில் இருந்து போனை 15 அங்குல இடைவெளியில் வைத்திருக்கையில் இது நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தான் உறங்கச் செல்லும் முன் போனை சார்ஜ் செய்வதற்காக இணைத்துள்ளார். காலையில் தூங்கி எழுந்து பார்க்கையில், அவரின் ஐ போனைச் சுற்றிப் புகை இருந்ததைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். அதிலிருந்து சிறிய அளவில் நெருப்பு பொறிகளூம் வந்திருக்கின்றன.

வீட்டிலிருந்த மெயின் ஸ்விட்சை ஆப் செய்துள்ளார். ஆனால், நெருப்பினால், போன் மொத்தமும் எரிந்து விட்டிருந்தது. நல்ல வேளையாக, சரியான நேரத்தில் அவர் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டார். இல்லையேல் விபரீத விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம்.

அதிகமான எண்ணிக்கையில் ஆப்பிள் போன்கள் மேல் நாடுகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியா விலும் இதன் மீதான மோகம் பரவிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்த இரு நிகழ்வுகளின் அடிப்படையில் தன் போன்களின் வடிவமைப்பை மறு பரிசீலனை செய்திடும் என எதிர்பார்க்கலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes