கம்ப்யூட்டரில் பைல்களை உருவாக்குகிறோம்; இணையத்திலிருந்து தரவிறக்கம் செய் கிறோம்; மற்றவர்களிடமிருந்து பெறுகிறோம். இவை அனைத்தையும் பயன்படுத்துகையில், பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் நகல்களை வெவ்வேறு ட்ரைவ்களில், டைரக்டரிகளில், போல்டர்களில் பதிந்து வைக்கிறோம்.
சில பைல்களை, அவற்றின் பெயர்களை மட்டும் மாற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிந்து வைக்கிறோம். இதனால், ஒரு பைல் பலமுறை காப்பி எடுக்கப்பட்டு, நம் கம்ப்யூட்டரில் தங்குகிறது. காலப்போக்கில், இந்த நகல்களால் ஹார்ட் டிஸ்க்கின் இடம் வீணாகிறது.
தேவையற்ற முறையில் இடம் பெற்றுள்ள பைல்கள் எவை என்ற தகவலையும், அவை எங்குள்ளன என்ற விவரத்தினையும் நாம் மறந்துவிடுகிறோம். இதனால், ஒரு கட்டத்தில் இவற்றைக் கண்டறிந்து நீக்குவது நம்மால் இயலாத செயல் ஆகிவிடுகிறது.
இது போல ஒன்றுக்கு மேற்பட்ட நகல்களாகத் தங்கும் பைல்களை இனம் மற்றும் இடம் காட்ட,
இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை இங்கு காணலாம்.
1. டூப்ளிகேட் கிளீனர் (Duplicate Cleaner):
இந்த புரோகிராம் MD5 Hash algorithm என்ற தொழில் நுட்ப வழிமுறையினைக் கையாள் கிறது. ஒரே பைல் வேறு பெயர்களில் இருந்தாலும், இந்த புரோகிராம் கண்டறிகிறது. எனவே ஒரே மாதிரியான டேட்டா உள்ள பைல்களை, அவை எந்த பெயரில் இருந்தாலும் கண்டறிந்து காட்டுகிறது.
கம்ப்யூட்டர் முழுவதும் அலசி ஆராய்ந்து, பார்மட், அளவு மற்றும் உருவாக்கப்பட்ட நாள் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஒரே பாடலை MP3, WMA, M4A, M4P, OGG, APE மற்றும் FLAC என வெவ்வேறு பார்மட்களில் இருந்தாலும், அவற்றை அடையாளம் காட்டுகிறது.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள், ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள், போட்டோக்கள், டெக்ஸ்ட் பைல்கள் என அனைத்தையும் ஸ்கேன் செய்து காட்டுகிறது.
அதே நேரத்தில் விண்டோஸ் மற்றும் சிஸ்டம் சார்ந்த அனைத்து பைல்களையும் இது தொடுவதில்லை. அவற்றை அப்படியே காட்டுவதுடன் விட்டுவிடுகிறது. இந்த புரோகிராமுடன் எந்தவிதமான அட்வேர் அல்லது ஸ்பைவேர் இணைந்து வருவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இது முழுமையாக இலவசமாகக் கிடைக்கிறது. இதனைப் பெற http://www.digitalvolcano. co.uk/content/duplicatecleaner என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.
2. டூப் டிடக்டர் (DupDetector):
இந்த புரோகிராம் இமேஜ் பைல்களை மட்டும் அவை ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தால் கண்டறிகிறது. அடிக்கடி போட்டோ எடுத்து கம்ப்யூட்டரில் வெவ்வேறு பெயர்களில் பதிந்து வைப்பவர்கள், அவற்றைக் கண்டறிந்து நீக்க இதனைப் பயன்படுத்தலாம். jpg, gif, bmp, png, tif, pcx, tga, wmf, emf, psp என பத்து வகையான பைல் பார்மட்களை இது கையாள்கிறது. இதனுடனும் எந்த விதமான மால்வேர் புரோகிராம்கள் வருவதில்லை.
இதனையும் இலவசமாக இணையத்திலிருந்து பெறலாம். இதனைப் பெறhttp://www.prismaticsoftware.com/dupdetector/dupdetector.htmlஎன்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
3. அஸ்லாஜிக்ஸ் டூப்ளிகேட் பைல் பைண்டர் (Auslogics Duplicate File Finder):
டாகுமெண்ட்கள், படங்கள் மற்றும் பிற அனைத்து பைல்களின் டூப்ளிகேட் நகல்களைக் கண்டறிகிறது. பெயர்களில் மட்டுமின்றி, ஒரே டேட்டாவுடனும் உள்ள பைல்களைக் காட்டுகிறது. இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராமினைப் பெறhttp://www.auslogics. com/en/software/duplicatefilefinder/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.
4. டபுள் கில்லர் (DoubleKiller):
டூப்ளிகேட் பைல்களைக் கண்டறியும் புரோகிராம் களில் வேகமாகச் செயல்படும் புரோகிராம் இது. ஒரே கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நெட்வொர்க் கம்ப்யூட்டர்களிலும் இது டூப்ளிகேட் பைல்களை ஸ்கேன் செய்கிறது. பெயர், அளவு, உருவாக்கப்பட்ட நாள் வாரியாக டூப்ளிகேட் பைல்களைப் பட்டிய லிட்டுக் காட்டுகிறது.
எத்தகைய பைல் களைத் தேட வேண்டாம் என பைலின் துணைப் பெயர் (*.mp3 or *.dll) கொடுத்து வரையறை செய்திடலாம். இதனைhttp://www.bigbangenterprises.de/en/doublekiller/ என்ற முகவரியில் உள்ள இணைய தளப் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
5. ஈஸி டூப்ளிகேட் பைல் பைண்டர் (Easy Duplicate Finder):
இந்த வகை புரோகிராம்களில் மிக வேகமாகவும், துல்லிதமாகவும் செயல்படும் புரோகிராம் இது. வேகமாகச் செயல்பட்டு, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டூப்ளிகேட் பைல்களையும், நாம் புரிந்து கொள்ளும் வகையில் பட்டியலிட்டு டெக்ஸ்ட் பைலாகக் காட்டுகிறது.
பின்னர் அவற்றை என்ன செய்வது என்பதற்கான வழிகளையும் காட்டுகிறது. இந்த இலவச புரோகிராமினைப் பெற http://www.easyduplicatefinder.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
6. பாஸ்ட் டூப்ளிகேட் பைல் பைண்டர் (Fast Duplicate File Finder):
பைலின் பெயர், அளவு, நாள் மட்டுமின்றி அவற்றில் உள்ள டேட்டாவின் அடிப்படையில் டூப்ளிகேட் பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்து, டூப்ளிகேட் பைல்களின் பட்டியலைத் தருகிறது. Binary comparison algorithm என்னும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. பட்டியலிட்டு, முந்தைய நாளிட்ட பைல் களை அழிக்கலாமே என்று சுட்டிக் காட்டுகிறது.
சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் இந்த தேடலில் இருந்து நீக்கி வைக்க ஆப்ஷன் தருகிறது. யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் பிற ஸ்டோரிங் மீடியாவில் உள்ள டூப்ளிகேட் பைல்களையும் கண்டறிகிறது. இதனைப் பெறhttp://www.mindgems.com/products/FastDuplicateFileFinder/ என்ற முகவரி யில் உள்ள தளத்தை அணுகவும்.
7. ஆல் டூப் (Alldub):
டெக்ஸ்ட், மியூசிக், மூவி என அனைத்து வகையிலும் டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிகிறது. பைல் முதன்மை பெயர், துணைப் பெயர், பைல் அளவு, பைல் டேட்டா, இறுதியாக பைலைத் திருத்திய நாள், பைல் உருவான நாள் என பலவகை பைல் அம்சங்களின் அடிப்படையில் இது தன் தேடலை மேற்கொண்டு டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து பட்டிய லிடுகிறது.
சிடி, டிவிடி, நெட்வொர்க் டிஸ்க் ஆகிய வற்றிலும் தேடலை மேற்கொள்கிறது. இதனைப் பெற http://www.alldup.de/en_ alldup.htmஎன்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.
0 comments :
Post a Comment