தற்போது பிரபலமாகி வரும் 3டி டிவிக்களுக்கு பதிலாக க்யூ.டி.,டிவி எனப்படும் புதிய தலைமுறைக்கான டிவி.,யை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த புதிய டிவியை மடத்து, எளிதில் கையில் எடுத்துக் கொண்டு போகும் விதமாகவும், பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள இந்த க்யூ.டி., டிவி, மனித தலைமுடியை விட 100,000 மடங்கு சிறிய தடிமனைக் கொண்டுள்ளதாவும்ல வளையும் தன்மை கொண்டதாகவும், வால்பேப்பர் முதல் பெரிய திரை வரையிலும் பெரிதாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இது பிளாட் ஸ்கிரீன் டிவி., விட தொழில்நுட்ப திறன் அதிகம் கொண்டதாகும்.
இந்த க்யூ.டி.,டிவிக்கள் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment