மானிட்டர், சிபியு, ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா?

கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், ஏதேனும் வேறு ஒரு வேலைக்காக, எழுந்து செல்ல வேண்டியதிருக்கும். வேலையின் தன்மையைப் பொறுத்து, இந்த கால அவகாசம் இருக்கும்.

அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டுச் செல்வோம். இடையே வந்த வேலையை முடித்து பின் மீண்டும் அதனைத் தொடர்வோம். இந்த கால நேரத்தில், மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திட வேண்டுமா?

வேலை பார்க்காத போது மானிட்டர்களை ஆப் செய்திட வேண்டிய கட்டாயம் சில ஆண்டுகளுக்கு முன்னால், நாம் மோனோகுரோம் எனப்படும் கருப்பு வெள்ளை திரை கொண்ட மானிட்டர்களைப் பயன்படுத்துகையில் இருந்தது.

இந்த மானிட்டர்களில் ஏதேனும் ஒரு காட்சியை அப்படியே விட்டுச் சென்றால், அது திரையிலேயே பதிந்து காட்டப்படும். ஆனால், காலப் போக்கில் இதற்கான மாற்று வழிகள் இருந்தன. ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கப்பெற்று, அவை அசையும் தோற்றத்தைக் கொடுத்தன. ஆனால் இப்போது எல்.சி.டி திரைகளுடன் மானிட்டர்கள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. எனவே பழைய பிரச்னை இல்லை.

இருந்தாலும், சிலர் ஸ்விட்ச் ஆப் செய்வதைப் பரிந்துரைக்கின்றனர். இதற்குக் காரணம் எல்.சி.டி. திரையின் பயன்பாட்டுக் கால ஆயுளை அதிகப்படுத்தத்தான். ஒரு எல்.சி.டி. திரை ஏறத்தாழ ஒரு லட்சம் மணி நேரங்கள் பிரச்னையின்றி இயங்கும்.

இது எவ்வளவு நாளாக இருக்கும்? உங்கள் எல்.சி.டி. திரையினை 24 மணி நேரமும் இயங்கும்படி வைத்தால், பத்து ஆண்டுகளில் அதன் பயன்பாடு 85 ஆயிரம் மணியாக இருக்கும். அப்படி என்றால், நாம் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை, அல்லவா.

கம்ப்யூட்டர் பயன்படுத்தாத போது நாம் சிபியு எனப்படும் கம்ப்யூட்டரின் முதன்மைப் பகுதியை ஆப் செய்கிறோம். ஏனென்றால், அதன் தேய்மானத்தைக் குறைக்க இது உதவிடும். சிபியுவில் சிறிய நகரும் சாதனங்கள், மின்சக்தியைக் கடத்தும் பகுதிகள் உள்ளன.

எந்த வேலையும் இல்லாத போதும், இவை குறிப்பிட்ட அளவில் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். இதனால் இவற்றின் தேய்மானம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மின்சக்தி எந்நேரத்தி லும் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அந்த நேரத்தில் சி.பி.யு.வின் பகுதிகள் எரிந்து போகும் அல்லது கெட்டுப் போகும் வாய்ப்புண்டு.

மேலும் நாம் புரோகிராம்களை இயக்குகை யில், அவற்றின் இயக்கத்தினை நிறுத்திய பின்னரும், சில பைல்கள் ராம் மெமரியில் தங்குகின்றன. இவை அடுத்தடுத்து நாம் மேற்கொள்ளும் செயல்பாட்டினை தாமதப்படுத்துகின்றன. எனவே கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆப் செய்து இவற்றை ராம் மெமரியிலிருந்து நீக்கி, மெமரியை புத்தாக்கம் செய்வது நல்லது.

இப்போது நமக்குக் கிடைக்கும் மின்சக்தி நிர்வாக புரோகிராம்கள் (Power Management Programs) இதனை செட் செய்திடும் வழிகளைத் தருகின்றன.

குறிப்பிட்ட நேரம் நாம் செயல்படாமல், கீ போர்ட் மற்றும் மவுஸ் இயக்காமல் இருந்தால் தானாகவே மானிட்டர் மற்றும் சிபியுவிற்குச் செல்லும் மின்சக்தியை நிறுத்தி வைக்கும் வகையில் ஆப்ஷன்கள் உள்ளன. இவற்றை செட் செய்து வைப்பதும், சிபியு மற்றும் மானிட்டர் களின் வாழ்நாளை நீட்டிக்கும்.


1 comments :

TamilTechToday at December 31, 2011 at 3:46 PM said...

Nice info great !

Online jobs just visit www.cutcopypaste.co.in

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes