கூகுள் நிறுவனம் தான் இதுவரை வடிவமைத்துப் பராமரித்து வந்த கூகுள் டிக்ஷனரி தளத்தை மூடிவிட்டது. 2009 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனம் தன்னுடைய டிக்ஷனரி ஒன்றைத் தன் சர்வரில் நிறுவியது.
http://www.google. com/dictionary என்ற முகவரியில் இயங்கிய அந்த டிக்ஷனரி தளம் பலருக்குப் பிடித்துப் போயிற்று. இதன் சிறப்பான சில விசேஷ வசதிகள் நன்றாகவே இருந்தன.
சொற்களுக்கு ஸ்டார் அமைத்து, பின் ஒரு நாளில் எளிதாக எடுத்துப் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டது பலருக்குப் பிடித்துப் போயிற்று.
இந்த தளம், தற்போது ஆகஸ்ட் 5 முதல் மூடப்பட்டுவிட்டது. மூடப்படுவதற்கான அறிவிப்பைக் கேட்டவுடன், பலர் இது குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். ஒருவர், முதல் முறையாக நான் கூகுள் நிறுவனத்தை வெறுக் கிறேன் என்று எழுதினார்.
கூகுளின் டிக்ஷனரி இருந்த தளத்திற்குச் சென்றால் (மேலே முகவரி தரப்பட்டுள்ளது) தளம் மூடப்பட்டதற்கான அறிவிப்பு தரப்பட்டுள்ளது. கூடுதல் விளக்க மும் கிடைக்கிறது. அதனைப் பார்க்கலாம்.
"கூகுள் தேடுதல் தளத்தில், நாங்கள் புதியதாக டிக்ஷனரி சாதனம் ஒன்றைப் பொறுத்தியுள்ளோம். இதன் மூலம் ஒரு சொல்லின் விளக்கத்தினைப் பெறலாம்.
இது கூகுள் டிக்ஷனரி தளம் தரும் அதே வசதியைத் தருவதால், கூகுள் டிக்ஷனரி தளத்தை மூடியுள்ளோம்' என்று கூகுள் அறிவித்துள்ளது.
சொற்களின் விளக்கம் பெற, சர்ச் பாக்ஸில் நேரடியாக அந்த சொல்லை டைப் செய்திடலாம். ரிசல்ட் பக்கத்தில் இடது பிரிவில் கிடைக்கும் டிக்ஷனரி டூலினைப் பயன்படுத்தி பொருள் பெறலாம். அல்லது நேரடியாக சர்ச் பாக்ஸில் define: என டைப் செய்து, பின் சொல்லை டைப் செய்து, பொருளைப் பெறலாம்.
2 comments :
நல்ல சேவையை ஏன் மூடுனாங்க ....
பகிர்வுக்கு நன்றி .......
உங்கள் சேவையை மீண்டும் தொடருங்கள்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment