தொடக்க நிலையில் குறைந்த விலையில் குவெர்ட்டி போன் தேடுவோர், நோக்கியாவின் சி3 தரும் அம்சங்கள் குறித்து பரிசீலிக்கலாம். நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போன் பார் டைப் மாடலாக, 115x58x14 மிமீ அளவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
114 கிராம் எடையுள்ளது. 2.4 அங்குல அகலத்தில் வண்ணத்திரை, 320X240 பிக்ஸெல்களுடன் இயங்குகிறது. ஸ்கிராட்ச் விழ முடியாத வகையில் திரை அமைக்கப்பட்டுள்ளது.
போட்டோ அழைப்பு வசதி கொண்ட முகவரி ஏட்டில், எண்ணிக்கை அளவின்றி முகவரிகளை அமைக்க முடியும். அதிக பட்சம் 30 நாட்களுக்கான அழைப்புகள் தேக்கிவைக் கப்பட்டு காட்டப்படுகின்றன.
போன் நினைவகம் 55 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 8 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு புளுடூத், வை-பி தரப்பட்டுள்ளது.
எம்.பி.3 பிளேயர், வீடியோ பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வாய்ஸ் ரெகார்டிங் வசதிகள், ஆடியோ மற்றும் வீடியோ ரசிகர்களுக்கு நிறைவாக இருக்கும்.
அதிக பட்சம் 1600X1200 ரெசல்யூசனுடன் கூடிய போட்டோக்களை எடுக்கக் கூடிய, 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. ஆட்டோ போகஸ் திறனுடன் பிளாஷ் இல்லாமல் போட்டோ எடுக்கப்படுகிறது. நொடிக்கு 15 பிரேம் எடுக்கும் வகையில் வீடியோ திறன் உள்ளது.
எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. மிக எளிதாக இயக்கக் கூடிய குவெர்ட்டி கீ போர்டு மூலம் டெக்ஸ்ட் டைப் செய்வது எளிதாக இருக்கிறது. சாம்பல், வெள்ளை மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் இந்த மொபைல் கிடைக்கிறது.
லித்தியம் அயன் 1320 mAh திறன்கொண்ட பேட்டரி இணைந்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 800 மணி நேரம் மின்சக்தி தங்குகிறது. தொடர்ந்து 7 மணி நேரம் பேசலாம்.
தொடக்க நிலை விலையில் நோக்கியா குவெர்ட்டி போன் தேடுபவர்கள் இதனைச் சற்று ஆய்வு செய்திடலாம். இதன் அதிக பட்ச விலை ரூ.5,900.
1 comments :
thanks for sharing.. vaalththukkal
Post a Comment