பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஆகஸ்ட் 24ல், புரோகிராம்களைத் தயார் செய்பவர் களுக்குத் தன் விண்டோஸ் எக்ஸ்பி புரோகிராமினை வெளியிட்டது மைக்ரோசாப்ட்.
உடனே உலக அளவில் மிக அதிகமான எண்ணிக்கையில் பெர்சனல் கம்ப்யூட்டர் களைத் தயாரித்து வழங்கிய டெல் மற்றும் எச்.பி. நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பதிந்து வெளியிட்டன.
உலகில் பல லட்சக்கணக் கானவர்களால், விரும்பிப் பயன்படுத்தப்பட்ட சிஸ்டமாகத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் இயங்கியது, இயங்கி வருவது விண்டோஸ் எக்ஸ்பி மட்டுமே. சென்ற வாரம் தான், இதன் பயன்பாடு 45% ஆகக் குறைந்தது.
பொதுமக்களுக்கான விண்டோஸ் எக்ஸ்பி, இரண்டு மாதங்கள் கழித்து அக்டோபர் 25ல் வெளியானது. வெளியான சில நாட்களில், லட்சக்கணக்கில் விற்பனையானது.
கூடவே நகல் எடுக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பிக் களும் வெளியாகிப் பயன்பாட்டில் இருந்தன. பொதுமக்களுக்கான வெளியீட்டி னைப் பெரும் அளவில் கொண்டாட இருந்தது மைக்ரோசாப்ட்.
ஆனால் செப்டம்பர் 11ல் ஏற்பட்ட இரட்டைக் கோபுர விபத்து இதனைத் தவிர்க்கச் செய்தது.
தொடர்ந்து மக்கள் இதனை விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கினர். ஜனவரி 2007ல், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தி யவர்கள் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது.
மொத்த பெர்சனல் கம்ப்யூட்டரில் 76.1 சதவிகித கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் எக்ஸ்பி இருந்ததாக கணக்கெடுப்பு வெளியானது.
தற்போதைய விண்டோஸ் 7, சென்ற 2009 அக்டோபரில் வெளியானது. இன்னும் இதனைச் செம்மைப் படுத்தும் பணியை மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment