தனிப்பட்ட நபர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த, இன்றும் மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் ஒன்றாக, ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் உள்ளது. இதன் புதிய தொகுப்பான ஏ.வி.ஜி. 2012 அண்மையில் வெளியிடப் பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தி வாங்கும் தொகுப்பில் உள்ள பெரும்பாலான வசதிகள், இலவச புரோகிராமில் இருப்பது இதன் சிறப்பாகும். ஆண்ட்டி வைரஸ், ஸ்பைவேர், ரூட்கிட்ஸ் மற்றும் ஸ்பேம் மெயில்களைத் தடுக்க என இந்த புரோகிராமில் தனித்தனி தொகுப்புகள் அடங்கியுள்ளன.
இதில் லிங்க் ஸ்கேனர் (Link Scanner) என்று ஒரு கூடுதல் வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. இது தேடல் முடிவு களையும், இணைய தளங்களுக்கான லிங்க்குகளையும் சோதனை செய்கிறது. இது இந்த புரோகிராமில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்பு வசதியாகும்.
2008 ஆம் ஆண்டு ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் செயலாக்கம் மிகவும் மெதுவாக இருந்ததாகப் பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால், 2009 மற்றும் அடுத்து வந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு களில் பல குறைகள் களையப் பட்டதுடன், நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் பல வசதிகள் தரப்பட்டன.
செயல்பாட்டினைப் பொறுத்தவரை, இன்று அவிரா மற்றும் அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் களுக்கு இணையாக இது கருதப்படுகிறது.
புதிய 2012 பதிப்பில், புரோகிராம் பைலின் அளவு 50% குறைக்கப் பட்டுள்ளது. இதனால் இணையத் திலிருந்து தரவிறக்கம் செய்வது வேகமாக நடை பெறுகிறது. இன்ஸ்டால் செய்வதும் வேகமாக மேற்கொள்ளப் படுகிறது.
ஹார்ட் டிஸ்க்கில் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளும் இடமும் குறைக்கப் பட்டுள்ளது. ப்ராசசர் இயங்கும் அளவு மற்றும் நினைவகத்தின் இடமும் 20% குறைவாக உள்ளது.
இணையத்தில் உலாவுகையில் மட்டுமின்றி, ஆன்லைன் சேட் செய்திடும்போதும் வைரஸ், மால்வேர், வோர்ம்ஸ், ஆட்வேர் மற்றும் ஸ்பேம் ஆகியவற்றை எதிர்க்கிறது. எந்த நேரமும் இதற்கான உதவிகள் கிடைக்கின்றன. விண்டோஸ் எக்ஸ்பி உட்பட அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்குகிறது.
இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://avg.en.softonic.com/download
1 comments :
மிகவும் பயன்னுள்ள தகவல்!.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment