ஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communications)

இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம்.

இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கு வது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது.

இந்தியா வில் இரண்டு சிஸ்டங் களும் இயங்குகின்றன. ஆனால், ஜி.எஸ்.எம். வகைதான் அதிக வாடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

லைன் இன் (Line In): கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.

Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது.

அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர் கள் அதன் செயல்பாட்டினை மேற் கொள்கின்றன.

இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற் கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும்.

Event Handler: ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்தி விடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிற தல்லவா! அந்த அழுத்தும் செயலின் பின்னணியே Event Handler என அழைக்கப்படுகிறது.


2 comments :

rajamelaiyur at September 10, 2011 at 7:07 PM said...

நல்ல பதிவு

aotspr at September 16, 2011 at 10:33 AM said...

மிகவும் பயன்னுள்ள தகவல்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes