பயர்பாக்ஸ் பதிப்பு 6

தன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுடன் பதிப்பு 6 னை, மொஸில்லா நிறுவனம் அண்மையில் அறிமுகப் படுத்தியுள்ளது. பயர்பாக்ஸ் பதிப்பு 5, சென்ற ஜூன் 21ல் வெளியானது. பின்னர், இரண்டு மாதங்களுக்குள்ளாக, இந்த புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு 16 வாரங்களுக்கு ஒருமுறை புதிய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு வெளி யிடப்படும் என்ற தன் வாக்குறுதியினை, மொஸில்லா நிறுவனம் செயல்படுத்தி யுள்ளது.

பயர்பாக்ஸ் 4, மார்ச் 22ல் வெளியானது. 12 வாரங்கள் கழித்து, பயர்பாக்ஸ் 5 ஜூன் 21ல் வெளியானது. ஆகஸ்ட் 16ல், எட்டு வாரங்கள் கழித்து, பயர்பாக்ஸ் 6 வெளியாகியுள்ளது.

இந்த பதிப்பில் மிக முக்கியமான மாற்றம் அட்ரஸ் பாரில், நாம் பார்க்கும் இணைய தளம் ஹைலைட் செய்யப்பட்டு காட்டப் படுவதுதான். அதாவது, இணையதளத்தின் முதன்மைப் பெயர் ஹைலைட் செய்யப் பட்டுக்காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக,http://www.mozilla.com/enUS/firefox/6.0 /releasenotes/ என்ற முகவரியில் உள்ள இணையதளம் காட்டப்படுகையில்,www.mozilla.com என்ற பெயர் ஹைலைட் செய்யபப்டும்.

இதனால், சில பிரபலமான தளங்களைப் போல, அவற்றின் இணைய தள முகவரியில், ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களைச் சேர்த்து போலியாகக் காட்டப்படும் தளங்களைச் சற்று எளிதாக அடையாளம் காண முடியும். நம்மைச் சிக்க வைத்திடும் தளங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

இந்த ஹைலைட்டிங் வசதி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல், 2009 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த பதிப்பில், பிரவுசர் கிராஷ் ஆவது அறவே தவிர்க்கும் வகையில் அனைத்து மேம்பாட்டு வழிகளும் அமைக்கப் பட்டுள்ளன. அதே போல, பாதுகாப்பு குறியீடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய பிரவுசர்களின் வேகத்தைக் காட்டிலும், இதன் வேகம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இன்டர்நெட் பிரவுசர் குறித்து ஆய்வு செய்திடும் அமைப்புகள், குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்பு ளோரர் 9, இதனைக் காட்டிலும் வேகமாக இயங்குவதாக அறிவித்துள்ளன.
ஒரு சிலர் இது புதிய பதிப்பே அல்ல. பழைய பதிப்பில் உள்ள குறைகளைக் களையும் சில நடவடிக்கைகளை எடுத்து அதனைப் புதிய பதிப்பு என்று மொஸில்லா கூறுவது, சென்ற பதிப்பு 5லேயே தொடங்கிவிட்டது. அது பதிப்பு 4.2 ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் பதிப்பு 5 ஆக அறிவிக்கப் பட்டது என்று குறை கூறுகின்றனர். அதே போலத்தான், பதிப்பு 6ல் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.

இருப்பினும் நீங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 5 வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருந் தால், பதிப்பு 6க்குமாறிவிடவும். சரியான பாதுகாப்பற்ற பதிப்பு 5க்கான சப்போர்ட் இப்போது மொஸில்லாவால் வழங்கப் படுவதில்லை.

அதன் பிரச்னைகளுக்குத் தீர்வான அம்சங்களுடன் தான் இப்போது பதிப்பு 6 கிடைத்துள்ளது. எனவே, பயர்பாக்ஸ் தான் நான் பயன்படுத்துவேன் என தீர்மானித்துள்ளவர்கள், பதிப்பு 6க்கு மாறிக் கொள்வது அவர்களுக்கும், அவர்களின் கம்ப்யூட்டருக்கும் நல்லது.

புதிய பதிப்பினை டவுண்லோட் செய்திட http://www.mozilla.com/enUS/firefox/new/ என்ற இணைய தள முகவரிக்குச் செல்லவும்.


1 comments :

ம.தி.சுதா at September 7, 2011 at 2:07 PM said...

சகோதரம் தங்கள் கொடுத்துள்ள தரவிறக்கச் சுட்டி எனது பயபோக்ஸ் மற்றும் குறோமில் இயங்கவில்லை.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes