விண்டோஸ் லோகோ கீ பயன்பாடு

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், அதன் சின்னத்துடன் ஒரு கீ, கீ போர்டில் தரப்பட்டிருக்கும். இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள் ளலாம். கீழே அந்த ஷார்ட்கட் கீகளும் அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட் டுள்ளன.

இவற்றில் சிலவற்றை நீங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் சூழ்நிலைகளும் உங்கள் செயல்பாட்டில் இருக்கலாம். எனவே கவனத்துடன் இவற்றை நினைவில் கொண்டு பயன்படுத்துங்கள்.


விண்டோஸ் லோகோ கீ தனியாக - ஸ்டார்ட் மெனு திறக்கவும் மூடவும்.
Pause கீயுடன்-சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
D கீயுடன் - டெஸ்க்டாப் காட்டப்படும். அப்போது இயங்கும் புரோகிராம்கள் அனைத்தும் சுருக்கப்பட்டு டாஸ்க் பாருக்குச் செல்லும். மீண்டும் அழுத்த, புரோகிராம்களின் விண்டோ கிடைக்கும்.
M கீயுடன் - அனைத்து விண்டோக்களும் சுருக்கப்பட்டு டாஸ்க்பாருக்குச் செல்லும்.
Shift + M கீகளுடன் - சுருக்கப்பட்ட புரோகிராம் விண்டோக்கள் திரைக்கு மீண்டும் வரும்.
E கீயுடன் - கம்ப்யூட்டர் திறக்கப்படும்.
F கீயுடன் - பைல் அல்லது போல்டர் தேட
Ctrl + F கீகளுடன் - நெட்வொர்க்கில் இருந்தால், கம்ப்யூட்டரைத் தேட
L கீயுடன் - கம்ப்யூட்டரை பூட்டி வைக்கும். அல்லது பயனாளரை மாற்றும்.
R கீயுடன் - Run டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
T கீயுடன் - டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம் களுக்கு ஒவ்வொன்றாகச் செல்லும்.
நம்பர் கீயுடன் - டாஸ்க் பாரில் பின் செய்யப்பட்ட புரோகிராம்களுக்கு, அதன் வரிசையில் அந்த எண் உள்ள புரோகிராம் செல்லும். ஏற்கனவே புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தால், அந்த புரோகிராம் செல்லும்.
Shift + நம்பர் கீயுடன் - புரோகிராமின் இன்னொரு இயக்கம் திறக்கப்படும். எந்த எண் கீ பயன்படுத்தப்படுகிறதோ, அந்த எண் வரிசையில் உள்ள புரோகிராம் திறக்கப்படும்.
Ctrl + நம்பர் கீயுடன் - எண் கீ அடிப்படையில், டாஸ்க்பாரில் உள்ள வரிசைப்படி, இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த புரோகிராமிற்குச் செல்லும்.
Alt + நம்பர் கீயுடன் - எண் கீ அடிப்படையில், வரிசையில் அந்த எண் உள்ள புரோகிராமினை இயக்க ஜம்ப் லிஸ்ட் திறக்கப்படும்.
Tab கீயுடன் - டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்கள் ஒவ்வொன்றாகச் செல்லும். இதற்கு Aero Flip 3D பயன்படுத்தப்படும்.
Ctrl+Tab கீயுடன் - டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்கள் ஒவ்வொன்றாக அம்புக் குறி கீ பயன்படுத்திச் செல்லும். இதற்கு Aero Flip 3D பயன்படுத்தப்படும்.
Ctrl+B கீயுடன் - நோட்டிபிகேஷன் ஏரியாவில் மெசேஜ் காட்டிய புரோகிராமிற்கு மாறும்.
Spacebar கீயுடன் - டெஸ்க்டாப் பிரிவியூ கிடைக்கும்.
Up Arrow கீயுடன் - விண்டோ பெரிதாக்கப்படும்.
Left Arrow கீயுடன் - திரையின் இடது பக்கம் விண்டோ பெரிதாக்கப்படும்.
Right Arrow கீயுடன் - திரையின் வலது பக்கம் விண்டோ பெரிதாக்கப்படும்.
Down Arrow கீயுடன் - இயங்கும் விண்டோ மினிமைஸ் செய்யப்படும்.
Home கீயுடன் - இயங்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப் படும்.
Shift + Up Arrow கீயுடன் - விண்டோ திரையின் மேல் கீழாக இழுத்து வைக்கப்படும்.


3 comments :

காந்தி பனங்கூர் at September 10, 2011 at 10:49 AM said...

கணிணி பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

aotspr at September 16, 2011 at 11:25 AM said...

பயன்னுள்ள தகவல்!.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Unknown at February 8, 2013 at 8:46 PM said...

very use full message

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes