மைக்ரோசாப்ட் வழங்கும் இலவசங்கள்

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது. அதே போல தன் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு மூலம் பயன்பாட்டு சாப்ட்வேர் வகையிலும் தனி நபர் ஆட்சியை நடத்துகிறது.

இதே போல இணைய பிரவுசர் வகையிலும் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பெரும்பங்கினைக் கொண்டுள்ளது. வேறு வழியின்றி, மக்களும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கு வதனையே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்க பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கு நேர் மாறாக, கூகுள் ஒரு ராபின்ஹூட் போல வேறு வர்த்தக வழிகளில் பணத்தைச் சம்பாதித்து, மக்களுக்குப் பல வசதிகளை இலவசமாகத் தந்து வருகிறது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனமும் பல சாப்ட்வேர் வசதிகளை இலவசமாகத் தந்து வருவது பலருக்குத் தெரியாமலேயே உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.


1. ஹாட்மெயில்:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய இமெயில் சேவை. இணையத்தில் முதல் முதலாக இமெயில் சேவையைப் பெரும் அளவில் இலவசமாக வழங்கிய நிறுவனம் ஹாட் மெயில். பின்னரே, இதனை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கி தன தாக்கிக் கொண்டது. தொடர்ந்து ஹாட் மெயில் சேவைகள் இலவசமாகவே கிடைத்து வருகின்றன.

மேலும்http://office.microsoft.com/enus/outlookhelp/microsoftofficeoutlookhotmailconnectoroverviewHA010222518.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தில் இலவசமாகக் கிடைக்கும் Microsoft Outlook Hotmail Connector மூலம், அவுட்லுக் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் ஹாட் மெயில் அக்கவுண்ட்களை இணைக்கலாம்.


2. விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ் (Windows Live Essentials):

விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பல டூல்களை இணைத்தே வழங்கி வந்தது. வாடிக்கையாளர்கள் பலர், இந்த இலவச டூல்கள் டிஸ்க் இடத்தைக் கபளீகரம் செய்கின்றன என்று குற்றம் சாட்டியதால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த இலவச டூல்களில் பல எடுக்கப்பட்டன.

இவை அழிக்கப்படாமல், மொத்தமாக விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக, இலவசமாக டவுண்லோட் செய்யும் வகையில், மைக்ரோசாப்ட் சர்வரில் வைக்கப் பட்டுள்ளது.

இந்த இலவச தொகுப்பில், விண்டோஸ் லைவ் மெயில் (Windows Live Mail), விண்டோஸ் லைவ் மெசஞ்சர் (Windows Live Messenger), விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh), விண்டோஸ் லைவ் ரைட்டர் (Windows Live Writer), போட்டோ காலரி (Photo Gallery), விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் (Windows Live Movie Maker), விண்டோஸ் பேமிலி லைவ் சேப்டி (Windows Live Safety), ஆகியவை தரப்படுகின்றன.

விண்டோஸ் லைவ் மெயில், ஒரு டெஸ்க்டாப் இமெயில் கிளையண்ட் புரோகிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட பல இமெயில் அக்கவுண்ட்களை இயக்கலாம்.

விண்டோஸ் லைவ் மெசஞ்சர் அடிப்படையில் இன்ஸ்டன்ட் மெசேஜ் டூல். இதன் மூலம் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் அக்கவுண்ட் ஏற்றுக் கொள்ளும் எந்த இன்ஸ்டண்ட் மெசஞ்சர் சேவையின் அக்கவுண்ட் கொண்டிருந் தாலும், அவர்களுடன் சேட் செய்திடலாம். இதனை இன்ஸ்டண்ட் மெசஞ்சர் என்று சொல்வதைக் காட்டிலும் ஆன்லைன் தொடர்பு வலை என்று விரிக்கலாம்.

விண்டோஸ் லைவ் மெஷ், உங்களின் பல கம்ப்யூட்டர்களின் டேட்டாவை ஒருங்கிணைக்க உதவுகிறது. லைவ் மெஷ் இயங்கும் மேக் மற்றும் விண்டோஸ் கம்ப்யூட்டர்களையும் இது இணைக்கிறது.


விண்டோஸ் லைவ் ரைட்டர்:

வேர்ட் ப்ரெஸ் மற்றும் ஷேர் பாய்ண்ட் போன்ற ப்ளாக்குகள் எனப்படும் வலைமனை களில் பதிவதற்கான டேட்டாவினை அமைப்பதற்கு விண்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுகிறது. நாம் விரும்பும் வகையில் டெக்ஸ்ட் டைப் செய்த பின்னர், இணைப்பதற்கான படங்கள், வீடியோ கிளிப்கள் போன்றவற்றை இணைக்க இது பயன்படுகிறது.


போட்டோ காலரி:

வகை வகையான ஆல்பங்களில் நம் போட்டோவினை ஒட்டி, ஷெல்ப்களில் அடுக்கி வைக்கின்ற காலம் போய்விட்டது. நம் கம்ப்யூட்டர் அல்லது இணையத்தில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி, நம் போட்டோக்களை ஆல்பங்களாக வைத்து வருகிறோம். இதனாலேயே, போட்டோக்களை இணைய சர்வர்களில் வைத்திட பல நிறுவனங்கள் இலவச இடம் அளித்து வருகின்றன. அது மட்டுமின்றி, போட்டோக்களை நம் விருப்பத்திற்கேற்ப இணைக்கவும், மாற்றி அமைக்கவும் டூல்களையும் இந்த தளங்கள் தருகின்றன. மைக்ரோசாப்ட் தரும் போட்டோ காலரி இந்த வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது.


விண்டோஸ் லைவ் மூவி மேக்கர்:

ஹை டெபனிஷன் வீடியோ காட்சிகள் ஸ்மார்ட் போன், லேப்டாப் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அதிகமான அளவில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. இதனாலேயே இந்த சாதனங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒரு பட இயக்குநர் எனத் தங்களை எண்ணிக் கொண்டு, படங்களை உருவாக்கி மன நிறைவு கொள்கின்றனர். விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் இந்த எண்ணம் கொண்டவர் களுக்கு மிகவும் உதவுகிறது. டைட்டில் அமைப்பது, முன்னுரை தருவது, பின்னணி இசை சேர்ப்பது என்பது போன்ற அனைத்து வேலைகளுக்கும் உதவுகிறது விண்டோஸ் லைவ் மூவி மேக்கர்.


விண்டோஸ் லைவ் பேமிலி சேப்டி:

இணையத்தில் உலாவ விரும்பும் நம் குழந்தைகளைக் கண்காணிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு சாதனம் தேவைப்படுகிறது. அந்த வகையில் நமக்கு மிகவும் உதவுவது இந்த விண்டோஸ் லைவ் பேமிலி சேப்டி. இதன் மூலம் பெற்றோர்கள், தங்கள் குழந்தை கள் பார்க்கும் இணைய தளங்கள் மட்டுமின்றி, இமெயில்களைக் கூடக் கட்டுப்படுத்தலாம்.


3. விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ்:

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் மெதுவாக கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறைக்கு மாறி வருகின்றனர். அவரவர் கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர் தொகுப்பு களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்து வதனைக் காட்டிலும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணைய சர்வர்களில் கிடைக்கும் அப்ளிகேஷன் தொகுப்புகளைப் பயன்படுத்த முன்வரு கின்றனர். இவ்வாறு உருவாக்கும் பைல்களையும் இணையத்திலேயே சேவ் செய்து, தேவைப்படுகையில் எடுத்துப் பயன்படுத்த விண்டோஸ் லைவ் ஸ்கை உதவுகிறது. நம்முடைய முக்கிய டேட்டா பைல்களை இதில் பேக் அப் ஆக சேவ் செய்து வைக்கலாம்.


4. ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்ஸ்:

மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அப்ளிகேஷன்களை இணையத்தில் இருந்தவாறே பெற்று பயன்படுத்த ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்ஸ் உதவு கிறது. உங்களுடைய கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் இன்ஸ்டால் செய்ய வில்லை என்றாலும், வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் பைல்களை, இதன் மூலம் உருவாக்கலாம். இவை எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்புகளில் கிடைக்கும் பார்மட்களிலேயே உருவாக்கப்படுவது இதன் சிறப்பாகும்.


5. செக்யூரிட்டி எசன்சியல்ஸ்:

ஒவ்வொரு விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் செக்யூரிட்டி சாப்ட்வேர் ஒன்று இப்போது அத்தியா வசியத் தேவையாக ஆகிவிட்டது. வைரஸ், வோர்ம், பிஷிங் அட்டாக், மால்வேர் என பலவகை ஆபத்துகள் நம் பெர்சனல் கம்ப்யூட்டரைச் சுற்றி வருகின்றன. இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க, விண்டோஸ் சிஸ்டத்திலேயே ஒரு பயர்வால் கிடைக்கிறது. இருப்பினும் முழுமையான ஒரு பாதுகாப்பு வளையம் வேண்டும் என விரும்புவோர், மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் தொகுப்பைப் பயன்படுத்தலாம்.

மேலே சொல்லப்பட்ட இலவச மைக்ரோசாப்ட் டூல்களில் ஒரு சிலவற்றை ஏற்கனவே நீங்கள் அறிந்து செயல்படுத்தி வரலாம். மற்றவையும் அதே போல சிறந்த பயன்களைத் தருபவை தான். ஒருமுறை பயன்படுத்திப் பார்த்தால் அதன் பலன்களை அனுபவிப்பீர்கள்.


1 comments :

முனைவர் இரா.குணசீலன் at June 2, 2011 at 11:52 AM said...

Payanulla Thagavalkal.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes