மனிதனின் புலனுறுப்புகளுள் புதிதாக ஒன்று சேர்ந்துள்ளதாக கூறினால் அது நிச்சயம் மொபைல்போனாகத் தான் இருக்கும் என்று அனைவரும் கூறுமளவிற்கு மொபைல்போனின் பயன்பாடு இன்று அதிகரித்துள்ளது.
மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதற்கு காரணம், அதிவேக தொலைதொடர்பும், குறைந்த விலையில் புதுப்புது அம்சங்களுடன் கிடைப்பது ஆகும்.
விலைகுறைந்தது முதல் அனைத்து நவீனதொழில்நுட்பங்களுடன் கூடிய மொபைல்போன்களுக்கும் தேவையான அடிப்படை விஷயம் பேட்டரி சார்ஜ் போடுவது ஆகும்.
பல முன்னணி நிறுவனங்கள் ஒரு மாத கால அளவிற்கு பேட்டரியில் சார்ஜ் நிற்கும் என்று பலவித அறிவிப்புகளோடு மொபைல்போன்கள் அறிமுகப்படுத்தப்படுவது யாவரும் அறிந்ததே. ஏற்கனவே, பேட்டரியில் சார்ஜ் ஏற்றுவதற்கு பெரும்பாலும் மின்சாரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரூபாய் நோட்டு, இலைகளின் மூலம் சார்ஜ் ஏற்றலாம் என்று அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கும் போதிலும், இதுஎல்லாம் தற்காலிக தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் என்று இதுவே நிரந்தர தீர்வாகாது என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.
இதற்காக, ஜப்பானின் டிஇஎஸ் நியூ எனர்ஜி நிறுவனம் பான் எனர்ஜி தொழில்நுட்ப அடிப்படையில் புதிய யூஎஸ்பி சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சார்ஜர் இயங்க மின்சாரம் தேவையில்லை. அதற்குப் பதிலாக வெப்பம் இருந்தாலே போதும்.
சூடானபொருட்களின் மீது இந்த கருவியை வைத்து மொபைல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சார்ஜர், வெப்ப ஆற்றலை, மின்ஆற்றலாக மாற்றுகிறது.
இந்த சார்ஜரின் மூலம் மொபைல்போன்கள் மட்டுமல்லாது எம்பி3 பிளயர், ஐபாட் உள்ளி்ட்டவைகளையும் சார்ஜ் செய்ய முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
0 comments :
Post a Comment