சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கேலக்ஸி எஸ் 2 என்ற உயர் ரக ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் எக்ஸைனோஸ் டூயல் கோர் ப்ராசசர் போனை இயக்குகிறது.
முதலில் வோடபோன் நிறுவனத்தின் வழியாக ரூ.32,890க்கு இந்த போன் கிடைக்க இருக்கிறது.
வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு, இந்த போனை வாங்கும்போது ஆறு மாதத்திற்கு 1 ஜிபி டேட்டா 3ஜி சேவை மூலம் இலவசமாய் இறக்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகமாகும் இதன் 16 ஜிபி மாடலில் என்.எப்.சி. தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.
போனை பத்திரமாக வைத்து இயக்க ஒரு லெதர் பவுச் தரப்படுகிறது. இன்னும் பல கேபிள்களும் கிடைக்கின்றன. இந்த போனை ஆன்லைன் மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.
0 comments :
Post a Comment