சாப்ட்வேர் உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம், மொபைல்போன் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக விளங்கும் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து அடுத்த தலைமுறைக்கான மொபைல்போனை உருவாக்க திட்டமி்ட்டுள்ளது.
இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்டீவ் பால்மர் கூறியதாவது, நோக்கியா உடன் இணைந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போதைய அளவில் சாப்ட்வேருக்கு என்று கைகோர்த்துள்ள தாங்கள், இனிவரும் காலங்களில் ஹார்டுவேர் தயாரிப்பிலும் பணியாற்ற உள்ளோம்.
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், குளோபல் மொபைல் ஈகோசிஸ்டம் உருவாக்கும் பொருட்டு நாங்கள் இருவரும் இணைந்து செயல்பட திட்டமி்ட்டோம்.
நோக்கியா நிறுவனம், இந்தியாவில் முன்னணி மொபைல்போன் வர்த்தக நிறுவனமாக உள்ளது. புதிய மொபைல்போனிற்கான சாப்ட்வேர் குறித்த அம்சங்களை தங்கள் நிறுவனம் பார்த்துக் கொள்ள இருப்பதாகவும், மற்ற முக்கிய பணிகளான ஹார்டுவேர் டிசைன், லாங்குவேஜ் சப்போர்ட் உள்ளிட்டவைகளை நோக்கியா நிறவனம் மேற்கொள்ள உள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மொபைல்போனில், தங்கள் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்ஜின் இடம்பெறும்படி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment