அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவல்காம், இந்தாண்டு இறுதிக்குள் நான்காம் தலைமுறை (4ஜி) தொழில்நுட்ப சேவையை அடிப்படையாகக் கொண்ட பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
குவல்காம் நிறுவனம், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே இதற்கான உரிமையை 4 சர்க்கிள்களில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த குவல்காம் (இந்தியா மற்றும் தெற்காசியா நாடுகள்) தலைவர் கன்வலீந்தர் சிங் கூறியதாவது, இந்த 4 ஜி சேவையை அறிமுகப்படுத்த தாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.
இதற்கான நான்கு கட்டங்களாக பணியை வகுத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றோம். முதற்கட்டமாக பிராட்பேண்ட் நிறுவனங்களோடு உடன்பாடு, இரண்டாம் கட்டமாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான முதலீடு மற்றும் அதற்கான சூழ்நிலையை மேம்படுத்துதல், மூன்றாம் கட்டமாக இந்த சேவைக்காக பல்வேறு ஆபரேட்டர் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுதல் மற்றும் இறுதியாக சேவையை அறிமுகப்படுத்துதல்.
தற்போது தாங்கள் மூன்றாம் கட்ட பணிகளில் உள்ளோம். ஆபரேட்டர் நிறுவனங்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தங்களுக்கு இணைந்து செயல்பட உள்ள ஆபரேட்டர் நிறுவனங்கள், சர்க்கிள்களில் இந்த சேவையை வழங்குவதற்கான நிதியுதவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
முதலில் நிதியுதவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ள ஆபரேட்டர் நிறுவனங்கள், இந்த சேவையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர துணிந்தால் தாங்கள் அவர்களை விட்டு விலக தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குவல்காம் நிறுவனம், டைம் டிவிசன் டியூப்லெக்ஸ் லாங் டெர்ம் எவலூசன்( டிடீடீ-எல்டிஇ) தொழில்நுட்பம் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகளை டில்லி, மும்பை, ஹரியானா மற்றும் கேரளா உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக வழங்கி வருகிறது.
தாங்கள் இந்த நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை தங்கள் வசம் வைத்திருப்பதாகவும், எஞ்சிய பங்குகள் துலிப் டெலிகாம் ஜிடிஎல் நிறுவனத்திடம் உள்ளது. தற்போது, இந்த 4ஜி சேவைக்காக எல்டிஇ நிறுவனத்தை பார்ட்னராக கொண்டு துவக்கப்பட உள்ளதாகவும், பெரும்பாலும் இந்த சேவை இந்தாண்டு இறுதியிலோ அல்லது 2012ம் ஆண்டு துவக்கத்திலோ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment