இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் எஸ்ஸார் நிறுவனம், 'சில்லரை ரீசார்ஜ்' முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, வோடபோன் எஸ்ஸார் தமிழ்நாடு உயர் அதிகாரி சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த சில்லரை ரீசார்ஜ், நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ரூ. 1 மற்றும் ரூ. 2 என்ற 2 அளவுகளிலான இந்த ரீசார்ஜின் மூலம்,. இரவுநேர கால்களை நிமிடத்திற்கு 10 பைசா என்ற அளவில் பேசலாம். 1 நாள் வேலிடிட்டி இதற்கு வழங்கப்படுகிறது.
சில்லரை ரீசார்ஜின் மூலம், ரூ. 1 ரீசார்ஜ் செயவதன் மூலம், 10 நிமிட அழைப்புகளையும், ரூ 2 ரீசார்ஜ் செய்வதன் மூலம், 20 நிமிட இரவுநேர அழைப்புகளை பெற முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment