முன்பே திட்டமிட்டு அறிவித்தபடி, வரும் ஜூன் 21 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு5 வெளி வர இருக்கிறது. அதற்கு முன்னதாக, அதன் சோதனைப் பதிப்பு அண்மையில் மே 17 அன்று வெளியிடப் பட்டது. இதில் சி.எஸ்.எஸ். அனிமேஷன் சப்போர்ட் செய்யப்படுவது புதிய வசதியாகும்.
ஏற்கனவே கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சபாரி இதனை மேற்கொண்டுள்ளது. இனி வரும் அனைத்து பயர்பாக்ஸ் பிரவுசர்களில், நிரந்தரமாக ஒரு ஹோம் டேப், பிரவுசரிலேயே இணைக்கப்பட்ட ஒரு பி.டி.எப். ரீடர், இணைய தள மெனு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் இருப்பது போன்ற ஜம்ப் லிஸ்ட் ஆகியவை இருக்கும்.
இவற்றில் இருக்கும் இன்னொரு சிறப்பான வசதி, இது போன்ற சோதனை தொகுப்பு களுக்கும், இறுதி தொகுப்பிற்கும் இடையே மாறிக் கொள்ள வழி தரும் சேனல் ஸ்விட்சர் தான். புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்திடாமல், இதன் மூலம் அப்டேட் செய்து கொள்ளலாம்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் “About” பக்கம் சென்று, “Change” என்ற லிங்க்கில் கிளிக் செய்திட வேண்டும். இதில் கிடைக்கும் மெனுவில் “Apply and Update” என்பதைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்தால் போதும். ஆனால் இதனைப் பயன்படுத்தி, பழைய தொகுப்பிற்கு மாற முடியாது. எடுத்துக் காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 4க்கு மாற முடியாது.
பதிப்பு 5ன் யூசர் இன்டர்பேஸ் ஏற்கனவே வெளிவந்த பயர்பாக்ஸ் 4ன் இன்டர்பேஸ் இடைமுகத்தினை அப்படியே கொண்டுள்ளது. கூகுள் தன் குரோம் பிரவுசரை, ஒவ்வொரு எட்டு வாரத்திற்கும் ஒரு முறை புதுப்பிக்கிறது. புதிய வசதிகளைத் தருகிறது.
மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தான் புதிய வசதிகளை இணைக்க விரும்பும் போதெல்லாம் புதுப்பித்துக் கொள்கிறது. பயர்பாக்ஸ் பதிப்பு 3க்கும் 4க்கும் இடையே நான்கு ஆண்டு இடைவெளி இருந்தது. ஆனால் 4க்கும் 5க்கும் இடையே மூன்று மாதங்கள் இடைவெளி மட்டுமே உள்ளது.
இதே போல மைக்ரோசாப்ட் தன் புதிய பதிப்பினை வெளியிட்டவுடனேயே, அடுத்த பதிப்பு வெளியிடப்பட இருக்குதேதியினை அறிவிப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனமும், ஆப்பரா நெக்ஸ்ட் என்று அடுத்த பிரவுசரினை உடனேயே அறிமுகப் படுத்துகின்றனர். இதற்குக் காரணம் பிரவுசர் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டிதான்.
ஆனால், மொஸில்லா இந்த போட்டியில் மிக மிக முன்னணியில் ஓடுகிறது. ஆறு வாரங்களுக்கு ஒரு புதிய பதிப்பினைக் கொண்டு வர இருக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று பதிப்பு 6 வெளி வர உள்ளது. இப்படியே போனால், இந்த ஆண்டின் ,2011, இறுதியில், பயர்பாக்ஸ் பதிப்பு 9 வெளியாகும்.
மேலும் இது குறித்த தகவல்களுக்கும், சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்திடவும்http://www.mozilla.com/enUS/firefox/channel/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும்.
0 comments :
Post a Comment