வந்தாச்சு MS-Office 2010

அலுவலக பயன் பாட்டிற்கான ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கள் அனைத்திலும் முனனணியில் இருப்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஒபிஸ் தொகுப்பு என்பது யாவரும் அறிந்த விடயம். 

ஸ்டார் ஒபிஸ், கொரல் ஒபிஸ், ஓபன் ஒபிஸ் என பல ஒபிஸ் தொகுப்புக்கள் வெளி வந்தாலும் எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்புக்கு நிகரானது என எதனையும் குறிப்பிட முடியாது. இதற்கு நிகரான ஒரு ஒபிஸ் தொகுப்பு இது வரையில் வெளிவரவில்லை எனலாம்.

உலகில் பலராலும் அதிகம் பயன் படுத்தப்படும் இந்த மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிப்பு ஒபிஸ் 2010 இம்மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது. எனினும் இது Microsoft Office 2010 Technical Preview எனப்படும் துறை சார்ந்த வல்லுனர்களுக்கான விசேட பதிப்பாகும். பொதுமக்கள் பாவனைக்கு அடுத்த மாதமே (ஜூன்) கிடைக்கப் பெறும் என மைக்ரோஸொப்ட் அறிவித்துள்ளது. இது ஒபிஸ் தொகுப்பின் 14 வது வெளியீடாகும்.

எம்.எஸ்.ஒபிஸ் 2010 தொகுப்பின் சோதனைப் பதிப்பை (Beta Version) கடந்த வருடம் மைக்ரொஸொப்ட் நிறுவனம் இணையத்தினூடு வெளியிட்டது. இதனை இன்று வரை பல லட்சக் கணக்கான கணினி பயனர்கள் இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துள்ளனர். 

எம்.எஸ்.ஒபிஸ் 2010 பார்வைக்கு ஒபிஸ் 2007 போன்று தோன்றினாலும் அதில் ஏராளமான மாற்றங்களுடன் புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை உள்ளே நுளைந்து பார்க்கும் போதுதான் அறிந்து கொள்ள முடிகிறது.

இதிலுள்ள சிறப்பம்சங்களைச் சுருக்கமாகச் சொன்னால் பவர்பொயிண்டில் வீடியோ படங்களை எடிட் செய்தல், போட்டோ எடிட் செய்தல், மற்றும் அவுட்லுக்கில் இமெயில்களைக் கையாள்வதற்கான புதிய வசதிகள், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.



பழைய ஒபிஸ் பதிப்புகளில் இருந்த மெனு, சப்மெனு கொண்ட இடை முகப்புக்குப் பதிலாக முன்னைய ஒபிஸ் 2007 பதிப்பில் ஓரளவு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ரிப்பன் இடைமுகப்பு (Ribbon Interface) முழுமையாக இந்த புதிய ஒபிஸ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒபிஸ் 2010 தொகுப்பிலுள்ள வர்ட், எக்ஸல் என அனைத்து மென்பொருள்களிலும் ரிப்பன் இடை முகப்பே முக்கிய இடம் பிடித்துள்ளது.

கணினி ஆவணங்களில் அடோபி (Adobe) நிறுவனம் உருவாக்கிய பீடிஎப் பைல் (PDF) வடிவம் அதிகம் பிரபல்யமானது. ஒபிஸ் 2010 ல் உள்ள அனைத்து மென்பொருள்களும் பீடிஎப் பைலை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. உதாரணமாக எம்.எஸ்.வர்டில் உருவாக்கிய ஒரு பைலை ஒரே க்ளிக்கில் பீடிஎப் பைலாக மாற்றிக் கொள்ளலாம். 

பவர் பொயிண்ட் ப்ரசண்டேசனில் நீங்கள் பயன் படுத்தும் வீடியோ க்ளிப் ஒன்றை எடிட் செய்ய வேண்டுமானால் வேறு வீடியோ எடிட்டிங் மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை. அதனைப் பவர் பொயிண்டிலேயே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது, வீடியோ பைல்களில் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்குவது மட்டுமன்றி மேலும் பல மெருகூட்டும் வசதிகளும் தரப்பட்டுள்ளன.


உங்கள் ஆவணங்களை விண்டோஸ் லைவ் (Windows Live) வழங்கும் ஸ்கை ட்ரைவ் (SkyDrive) எனும் இணையம் சார்ந்த சேமிப்பகங்களுக்கு அப்லோட் செய்து விட்டு அந்த பைல்களை உலகின் எப்பகுதியிலிருந்தும் அணுகக் கூடிய வசதியையும் ஒபிஸ் 2010 தருகிறது.

யூ டியூப் ( YouTube) போன்ற இணைய வீடியோக்களை பவர் பொயிண்ட் டில் இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. அதனையும் இலகுவாக கொப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். இணைக்க வேண்டிய வெப் வீடியோவின் Embed Code ஐ பிரதி செய்து ஒட்டி விட்டாலே போதுமானது.

இந்த ஒபிஸ் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிரதான மாற்றமாக அதன் இணையம் சார்ந்த பயன்பாட்டைக் குறிப்பிடலாம். அதாவது ஒபிஸ் தொகுப்பிலுள்ள வர்ட், எக்சல் போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை கணினியில் நிறுவாமலேயே இணையத்தினூடு இலவசமாக பயன் படுத்தும் வசதியை வழங்க விருக்கிறது. 

இவ்வாறு இணையத்தினூடு அணுகி அதனைப் பயன்படுத்துவதை வெப் எப் (Web App) எனப்படுகிறது. இது போன்ற சேவையை கூகில் நிறுவனம் ஏற்கனவே கூகில் டொக் (Google Doc) எனும் பெயரில் வழங்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

Screen Capture எனும் கருவி மூலம் திரையில் தோன்றுவதை முழுமையாகாவோ பகுதியாகவோ பட்ம் பிடித்து வர்ட், எக்ஸல் போன்ற எப்லிகேசன்களில் நுளத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

Office Home and Business 2010Office Professional 2010Office Professional Plus 2010 என பல வேறு பட்ட பயனர்களுக்கென ஒபிஸ் பதிப்பை வெளியிடவுள்ளது மைக்ரோஸொப்ட். அத்தோடு கையடக்கத் தொலைபேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் பயன் படுத்தக் கூடிய ஒபிஸ் 2010 பதிப்பையும் வெளியிடவிருக்கிறது.

முன்னைய ஒபிஸ் பதிப்புகள் Windows Mobile இயங்கு தளம் கொண்ட கையடக்கக் கணினிகளை மட்டுமே ஆதரித்தது. எனினும் தற்போதைய பதிப்பை ஐபோன் (iPhone) போன்ற விண்டோஸ் மொபைல் அல்லாத கையடக்கத் தொலைபேசிகளிலும் கையடக்கக் கணினிகளிலும் பயன் படுத்தலாம்.

ஒபிஸ் 2010 ஐ விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் 7 பதிப்பு இயங்கு தளங்களில் நிறுவ முடியும்.. இதை நிறுவுவதற்கான விசேட தேவைகள் ஏதும் கணினியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒபிஸ் 2007 பதிப்பு உங்கள் கணினியில் நிறுவ முடியுமானால் ஒபிஸ் 2010 ஐயும் இலகுவாக நிறுவி விடலாம்.

பீட்டா பதிப்பைப் பயன் படுத்திப் பார்த்ததில் எம்.எஸ்.ஒபிஸ் பல வருடங்களாக காத்து வரும் தன் பிரபல்யத்தை மேலும் பல தசாப்தங்கள் தக்க வைத்துக் கொள்ளும் என்பதே என் கருத்து.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes