பிளாக்பெரி போல்டு 9700

ஆர்.ஐ.எம். நிறுவனம், இந்தியாவில் தன் பிளாக்பெரி போல்டு 9700 மாடல் மொபைல் போனை, விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது.

வண்ணம் மட்டுமின்றி, இந்த போனின் அம்சங்களும் மிகச் சிறப்பான ஒன்றாக இதனை மாற்றியுள்ளன. இந்த மாடல் போனின் திரை 2.44 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 480து360 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட, டி.எப்.டி. / எல்.சி.டி. திரையாக அமைக்கப் பட்டுள்ளது.

மெனு மற்றும் ஐகான் களைத் தேர்ந்தெடுக்க கிளிக் செய்திடும் வசதி கொண்ட ட்ரேக் பேட் தரப்பட்டுள்ளது. வால்யூம் கட்டுப்படுத்த தனி கீகள் இருப்பது, ஆடியோ, வீடியோவினை ரசிப்பதில் தனி அனுபவத்தினைத் தருகிறது. கம்ப்யூட்டருடன் ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இணைக்க முடிகிறது.

இதன் மெமரியினை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இமெயில்கள், மெசேஜ், அப்ளிகேஷன்கள், மல்ட்டிமீடியா பைல்கள் மற்றும் பிற டாகுமெண்ட்களுக்கென தனி பாக்ஸ் தரப்பட்டுள்ளது.

இதில் தரப்பட்டுள்ள 3.2 மெகா பிக்ஸெல் கேமரா மூலம் எடுக்கப்படும் வீடியோ படங்களை மற்றவர்களுடன் எளிதாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

கூடுதல் வேகத்தில் 3ஜி நெட்வொர்க் தொடர்பு கிடைக்கிறது.இதனால் இணையத்தில் மிக வேகமாக பிரவுஸ் செய்திட முடிகிறது. வை– பி வசதி உள்ளதால், இவ்வகை இணைப்பு கிடைக்கும் இடங்களில், போனை நன்றாகப் பயன்படுத்த முடிகிறது.

இதில் 1500ட்அட திறன் கொண்ட பேட்டரி இணைக்கப் பட்டுள்ளதால், 6 மணி நேரம் தொடர்ந்து போனைப் பயன்படுத்த முடிகிறது. பயன்படுத்தாத காலத்தில், 21 நாட்கள் இதன் திறன் குறையாமல் உள்ளது.

இதன் 624Mஏத் ப்ராசசர், பிளாக்பெரி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பு 5ல் இயங்குவதால், அனைத்து அப்ளிகேஷன் களும் நல்ல வேகத்தில் இயங்குகின்றன. டா ட்டா, வோடபோன், ஏர்டெல் சர்வீஸ் புரவைடர்களிடம் இந்த போன் கிடைக்கிறது. இதன் விலை ரூ.31,900.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes