தன் ஆபீஸ் 2010 தொகுப்பிற்கான தகவல் விளக்க நூல் ஒன்றினை பி.டி.எப். வடிவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது.
இதனை இலவசமாக http://www.microsoft.com/ downloads/details.aspx?FamilyID=860761E2CE6A408DA52D67F8E6A9388E&displaylang=en என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 258 பக்கங்கள் கொண்ட இந்த நூல், பெரும்பாலும் தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிபவர்கள், ஹெல்ப் டெஸ்க் அலுவலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த தொகுப்பினைப் பயன்படுத்துபவர்களுக்கும் இது மிகப் பயன்படும். இந்த கூட்டுத் தொகுப்பில் உள்ள வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட், அக்சஸ், இன்போ பாத், ஒன் நோட், அவுட்லுக், ப்ராஜக்ட், ஷேர்பாய்ண்ட் டிசைனர், ஒர்க்ஸ்பேஸ்,விஷியோ ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், அத்தியாயங்கள் வாரியாகத் தரப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து வல்லுநர்களுக்கான தொழில் நுட்ப தகவல்களும் கிடைக்கின்றன. சாதாரணமாகப் பயன்படுத்து வோருக்குமான குறிப்புகளும் இவற்றில் உள்ளன. டவுண்லோட் செய்து வைத்துக் கொண்டால், சந்தேகம் எழும்போது படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
0 comments :
Post a Comment