ஜூலை 1, 2010 அன்று பயர்பாக்ஸ் பிரவுசர் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகள் மற்றும் தீம்ஸ் எனப்படும் காட்சித் தோற்றங்கள், 200 கோடிக்கும் மேலாக டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன. addons.mozilla. org என்ற தளத்திலிருந்து இவை சென்ற மூன்று ஆண்டுகளில் நடந்தேறியுள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசர் தொடர்ந்து வாடிக்கை யாளர்களின் பிரியமான பிரவுசராக இருப்பதற்கு, அதன் ஆட் ஆன் தொகுப்புகள் ஒரு காரணமாகும். பல்வேறு வசதிகளை இந்த தொகுப்புகள் தந்து வருகின்றன. மேலும் இந்த பிரவுசர் ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைந்திருப்பதால், யார் வேண்டு மானாலும் இத்தகைய தொகுப்புகளைத் தயாரித்து வழங்கலாம் என்பதுவும் இதன் சிறப்பாகும். சென்ற 2008 நவம்பரில் ஆட் ஆன் டவுண்லோட் நூறு கோடியைத் தாண்டி இருந்தது. அடுத்த 19 மாதங்களில் இந்த எண்ணிக்கை இருநூறு கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 15 கோடி தொகுப்புகள் பயன்படுத்தப்படுவதாக மொஸில்லா அறிவித்துள்ளது. இவற்றில் மிகச் சிறந்த ஆட் ஆன் தொகுப்புகளாக 25 தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து மொஸில்லா தன் தளத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றை https://addons.mozilla.org/enUS/firefox/collection/bestof2billion?src=rockyourfirefox என்ற முகவரியில் உள்ள தளத்தில் பார்த்துத் தேவைப்பட்டால் டவுண்லோட் செய்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு http://rockyourfirefox.com/2010/07/2billiondownloads/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
பயர்பாக்ஸ் ஆட் ஆன் 200 கோடி டவுண்லோட்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment