விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன.
எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா? அந்த நேரத்தில் இந்த ரிப்பேர் டிஸ்க் உங்களுக்கு கைமருந்தாக உதவும். இதில் பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழுதுகளுக்குத் தீர்வு தரும் புரோகிராம்கள் பதியப்படும்.
இவை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கின்றன. அல்லது ரெஸ்டோர் புரோகிராம் போல, முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு செல்கின்றன.
இந்த டிஸ்க்கைத் தயாரிக்கக் கீழ்க்காணும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.
1. ஸ்டார்ட் (Start) கிளிக் செய்திடவும். பின் சர்ச் பாக்ஸில்(Search Box), Create a System Repair Disk என டைப் செய்திடவும். மேலிருக்கும் பட்டியலில் ஒரு ஐகான் காட்டப்படும். அதில் கிளிக் செய்திடவும்.
2. இப்போது உங்களுக்கு ஒரு விஸார்ட் கிடைக்கும். இனி, காலியாக உள்ள சிடி அல்லது டிவிடியை இணைக்கவும். அடுத்து மானிட்டர் திரையில் காட்டப்படும் செய்திகளுக்கேற்ப நடந்து கொள்ளவும். முழு வேலையும் முடிந்த பின்னர், இந்த சிடியைப் பாதுகாப்பாக வைக்கவும்.
எப்போதாவது ஆப்பரேட்டிங் சிஸ்டம் தகராறு செய்து, சிஸ்டம் முடங்கிப் போனால், இந்த சிடியை, சிடி ட்ரேயில் நுழைத்து, இயக்கவும். இவ்வாறு இயக்க உங்கள் பயாஸ் (BIOS)) செட் அப்பில், சிடி வழியாக பூட் செய்வதனையும் சேர்க்க வேண்டும்.
0 comments :
Post a Comment