ஆப்பரா 10.60 சோதனை பதிப்பு

முந்தைய பிரவுசர் பதிப்பைக் காட்டிலும் 50% கூடுதல் வேகத்துடன் இயங்கும் பிரவுசர் பதிப்பு ஒன்றை ஆப்பரா (http://www.opera.com/)  வெளியிட்டுள்ளது. 

இந்த புதிய பதிப்பு தற்போது சோதனை பதிப்பாகத்தான் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இதனைப் பயன்படுத்துபவர்  உலகின் எந்த இடத்தில் இருந்து இயங்குகிறார் என்பதனை அறியும் வசதி தரப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், இந்த பிரவுசர் நமக்கு வேண்டிய தேடல் தகவல்களைத் தரும். ஸ்பீட் டயல், டேப் பிரிவியூ மற்றும் ஆப்பரா மெனு ஆகியவற்றில் புதிய கிராபிக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.   

இந்த பிரவுசர் மிக வேகமாக, உங்கள் முகத்தில் அடிப்பது போலத் திறக்கப்படும் என இதனை உருவாக்கிய குழுவிற்கு தலைமை ஏற்ற கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆப்பரா, மிக வேகமான ஒரு பிரவுசராக உள்ளது என்று கூறியுள்ளார்.http://www.opera.com/browser/next/
என்ற தளத்திலிருந்து இதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes