தற்போது அறிமுகமாகியுள்ள "3 ஜி' மொபைல் தொழில் நுட்பத்தை விட, 40 மடங்கு வேகமான "4 ஜி' தொழில் நுட்பம் விரைவில் வெளிவரவுள்ளதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த சாப்ட்வேர் பொறியாளர் தெரிவித்துள்ளார். கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் புதுமை' பற்றிய தேசிய கருத்தரங்கம், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் நடந்தது. ஆஸ்திரேலியா, "பிரவாகனா சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தின் சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் பாலகிஷனானே, கம்ப்யூட்டர் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்கள் பற்றி விளக்கினார். அவர் பேசுகையில், ""இன்றைய கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் படுவேகமான உலகுக்கு அனைவரையும் அழைத்துச் செல்கிறது. தற்போது அறிமுகமாகியுள்ள "3 ஜி' மொபைல் தொழில் நுட்பம், இன்டர்நெட் தொழில் நுட்பத்தை விட படுவேகமானது. இதற்கு அடுத்தபடியாக, "4 ஜி' தொழில் நுட்பம் வரவிருக்கிறது. 4 ஜி தொழில் நுட்பம், 3 ஜி தொழில் நுட்பத்தை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்தது. சாதாரண பிராட் பேண்ட் தொழில் நுட்பத்தை விட 20 - 40 மடங்கு வேகமானது. இத்தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன,'' என்றார்
விரைவில் '4 ஜி' மொபைல்
Subscribe to:
Post Comments
(
Atom
)
1 comments :
இந்தியாவில் எப்பொழுது இந்த வசதி கிடைக்கும்?இந்தியாவில் எப்பொழுது இந்த வசதி கிடைக்கும்?
Post a Comment