மெமரி சாதனங்களைத் தயாரித்து விற்பனைக்கு வழங்குவதில் பன்னாட்டளவில் புகழ் பெற்ற ட்ரான்ஸென்ட் நிறுவனம், அண்மையில் ஜெட்பிளாஷ் 600 என்ற புதிய பிளாஷ் டிரைவ்களை அறிமுகப்படுத்தியது.
மிகக் குறைந்த எடையில் தயாரிக்கப்பட்ட இந்த டிரைவ்களில், டூயல் சேனல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் டேட்டா படிப்பது நொடிக்கு 32 எம்பி வேகத்தில் நடைபெறுகிறது. எழுதுவது 18 எம்பி வேகத்தில் நடைபெறுகிறது. பெர்சனல் கம்ப்யூட்டரின் எந்த யு.எஸ்.பி. டிரைவிலும் இவற்றை இணைத்துச் செயல்படுத்தலாம்.
ஜெட் பிளாஷ் 600 வரிசையில் உள்ள அனைத்து பிளாஷ் டிரைவ்களும் பளபளப்பான கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒளி ஊடுறுவிச் செல்லும் வகையில் உள்ள வண்ண பேண்ட், தகவல்கள் எழுதப்படும் போதும், படிக்கப்படும்போதும் ஒளிர்கிறது.
இதில் ட்ரான்ஸென்ட் தரும் டேட்டா டூல்ஸ் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம் தானாக இணையத்தின் முகவரிகளில் லாக் ஆன் செய்திடலாம். இந்த பிளாஷ் டிரைவ்களை விண்டோஸ் 7 வரையிலான அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பயன்படுத்தலாம்.
மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களையும் இந்த பிளாஷ் டிரைவ் சப்போர்ட் செய்வதனால், வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களிடையே டேட்டாக்களை எளிதாகப் பரிமாறிக் கொள்ளலாம். இவை 4ஜிபி (ரூ. 1,200) 8 ஜிபி (ரூ. 2,000) 16 ஜிபி (ரூ. 4,000) மற்றும் 32 ஜிபி (ரூ. 8,000) அளவுகளில் கிடைக்கின்றன.
0 comments :
Post a Comment