இளைஞர்களிடையே தன் கோர்பி மாடல் போன்கள் பிரபலமானதைக் கண்ட சாம்சங் நிறுவனம், மேலும் இரு மாடல்களை அதே வரிசையில் கொண்டு வந்துள்ளது . கோர்பி பிளஸ் (Corby Plus B3410) ) பி 3410 மற்றும் கோர்பி புரோ பி 5310 (Corby Pro B5310) என இரு போன்கள் வெளிவந்துள்ளன.
இவற்றையும் சேர்த்து மொத்தம் ஐந்து மாடல்கள் கோர்பி வரிசையில் உள்ளன. இதனுடைய டச் யூசர் இன்டர்பேஸ் மற்றும் ஸ்லைடிங் குவெர்ட்டி கீ போர்ட், ஒரே கிளிக் செய்து கிடைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங், சேட்டிங், எளிதான இமெயில் செட்டிங் ஆகியவை பயன்படுத்துபவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.
இந்த இரண்டு மாடல்களும் பெரிய அளவில் டெக்ஸ்ட் மெயில் அனுப்புபவர்களுக்கானதாக தயாரிக்கப்பட்டுள்ளன.YouTube, Flickr, Picasa மற்றும் Photobucket போன்ற தளங்களுக்கு எளிதில் ஒரே டச் கீயில் இணைப்பு கிடைக்கின்றன.
கோர்பி ப்ளஸ் 2.6 அங்குல எல்.சி.டி. திரை, 2 மெகா பிக்ஸெல் கேமரா, ரெகார்டிங் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, போன் அழைப்புகளை பதியக் கூடிய வசதி, 3.5 மிமீ இயர் போன் ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன.
கோர்பி புரோ, பிசினஸ் போன்களில் எதிர்பார்க்கக் கூடிய அனைத்து வசதிகளுடன் மல்ட்டி மீடியா அம்சங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புஷ் இமெயில்சர்வீஸ், உரையாடல் மாடலில் எஸ்.எம்.எஸ்., பேஸ்புக் மற்றும் மை ஸ்பேஸ் தளங்கள் நேரடி இணைப்பு ஆகியவை தரப்பட்டுள்ளன.
2.8 அங்குல முழு டி.எப்.டி. டச் ஸ்கிரீன் திரை, 3 எம்பி டிஜிட்டல் கேமரா, வை–பி இணைப்பு, 3ஜி வசதி, நான்கு பேண்ட் இணைப்பு மற்றும் மியூசிக் இயக்க என தனி கீகள் என வசதிகள் தரப்பட்டுள்ளன. கோர்பி ப்ளஸ் ரூ. 10,050 எனவும், கோர்பி புரோ ரூ.13,900 எனவும் விலையிடப்பட்டுள்ளன.
சாம்சங் இதே வரிசையில் மேலும் சில மாடல்களைக் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. அதன் பிரபலமான சாம்சங் கோர்பி எஸ் 3650 மாடலில் வை–பி வசதி தரப்படுகிறது. இது ரூ.10,000 முதல் ரூ.11,000 வரையிலான விலையில் இருக்கலாம்.
மேலும் இதே போன் சி.டி.எம்.ஏ. வில் இயங்கும் மாடலாகவும் வர இருக்கிறது. விரைவில் இது வெளியாகும் எனத் தெரிகிறது.
ஒவ்வொரு மாதமும் 90 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படும் சந்தையில், நோக்கியா விற்கு அடுத்தபடியாக, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் இடம் பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் 18.5 சதவீத வளர்ச்சியைக் கொண்ட சாம்சங், இந்த ஆண்டில் இது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
வரும் ஆண்டில் 18 லட்சம் டச் ஸ்கிரீன் போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கும் சாம்சங், அந்த பிரிவில் முதல் இடம் பெற முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து டச் ஸ்கிரீன் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில் சாம்சங் 43 புதிய மொபைல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 12 டச் ஸ்கிரீன் போன்களாகும்
0 comments :
Post a Comment