இந்த வேதனையைப் போக்க நமக்கு இணையத்தில் ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் உங்களைப் பதிந்து கொண்டால் இசைப் பைல்களை 25 ஜிபி வரை சேமித்து வைக்கலாம். அதுவும் எந்த கட்டணமும் செலுத்தாமலே.
எனவே சிடிக்களைத் தூக்கிக் கொண்டு அலையாமல் எப்போது பாடல் வேண்டுமோ அப்போது இந்த தளம் சென்று பாடலை இறக்கி கேட்டு மகிழலாம். எந்த ஊரிலும் எந்த நாட்டிலும் உங்களுக்கான பாடல் கிடைக்கும் அல்லவா.
இந்த தளத்தின் முகவரி www.MP3tunes.com இந்த தளம் சென்று உங்களுக்கென ஒரு அக் கவுண்ட்டை உருவாக்கி பின் நீங்கள் சேர்த்து வைத்த பாடல்கள் அனைத்தையும் அப்லோட் செய்யலாம். அதன் பின் எந்த இடத்திலிருந்தும் இந்த தளம் சென்று அங்கே உங்கள் யூசர் அக்கவுண்ட் மூலம் உங்கள் பாடல்களைப் பெறலாம்.
உங்கள் நண்பர்களிடன் இணைய வெளியில் இசை லாக்கர் ஒன்றை இலவசமாகக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். நண்பர்கள் நல்லவர்கள் என்றால் அவர்களுக்கும் உங்கள் யூசர் நேம் மற்றும் ஐ.டியைக் கொடுத்து பாடல்களைக் கேட்டு ரசிக்கச் சொல்லலாம்.
இந்த தளத்தின் பெயரில் எம்பி 3 என இருப்பதால் எம்பி 3 பாடல்களை மட்டும் தான் இது ஏற்றுக் கொள்ளும் என எண்ண வேண் டாம். அனைத்து வகை பார்மட் டு களையும் இது ஏற்றுக் கொள்கிறது
0 comments :
Post a Comment