சோஷியல் நெட்வொர்க்கிங் மற்றும் டெக்ஸ்ட்டிங் வேலைகளுக்கு, மொபைல் போன்களில் டைப் ரைட்டர் கீ போர்டான குவெர்ட்டீ கீ போர்டு இருந்தால், மிக வசதியாக இருக்கும்.
ஆனால் தொடக்க முதலே, மொபைல் போன்களில் குவெர்ட்டி கீ போர்ட் என்பது, ஓர் ஆடம்பர வசதியாகக் கருதப்பட்டு, அதிக விலையுள்ள மொபைல் போன்களில் மட்டுமே தரப்பட்டது.
தற்போது பல மொபைல் நிறுவனங்கள் இந்த வகை கீ போர்டினைக் குறைந்தவிலையுள்ள போன்களில் தரத் தொடங்கியுள்ளன. நீங்கள் இது போன்ற ஒரு கீ போர்ட் கொண்ட மொபைல் போன் வாங்க வேண்டும் என விரும்பினால், கீழ்க்கண்ட போன்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
1. நோக்கியா இ 63 (Nokia E63).
இது நோக்கியா இ71 மொபைலின் தம்பி எனலாம். 2.3 அங்குல திரை, 3ஜி வசதி, எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வை–பி, புளுடூத், 2 எம்பி கேமரா, எப்.எம். ரேடியோ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் உள்ளன. விலை ரூ.11,059.
2. சாம்சங் கோர்பி டி.எக்ஸ்.ட்டி.(Samsung Corby TXT):
சோஷியல் நெட்வொர்க்கிங் பணிகளுக்கு அதிக டெக்ஸ்ட் அமைப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ரூ. 7,300 விலையில் சாம்சங் அண்மையில் வெளியிட்ட போன் இது. 2.2 அங்குல திரையுடன் அனைத்து மல்ட்டி மீடியா வசதிகளும் இதில் உள்ளன.
3.எல்.ஜி. கே.எஸ்.360 (LG KS 360):
வசதியாகத் தனித் தனி கீகளுடன் அமைக்கப்பட்ட ஸ்லைடிங் குவெர்ட்டி கீ போர்டு, கேம்ஸ் விளையாட தனி கீகள், ஓரளவு டச் சென்சிடிவ் ஆன டிஸ்பிளே ஸ்கிரீன் மற்றும் மல்ட்டி மீடியா வசதிகள் கொண்ட இந்த போனின் குறியீட்டு விலை ரூ.8,099.
4. சாம்சங் கோர்பி மேட் (Samsung Corby Mate):
ஸ்லைடிங் குவெர்ட்டி கீ போர்டாக இருப்பதால் நல்ல வசதியுடன் இதனை இயக்க முடியும். வழக்கமான மற்ற மல்ட்டி மீடியா வசதிகளும் (எப்.எம். ரேடியோ, கேமரா, வீடியோ,) தரப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 7,900.
5. மைக்ரோமேக்ஸ் க்யூ 3 (Micromax Q3):
இந்தியாவின் மொபைல் உலகில் வேகமாகக் கால் ஊன்றி வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சில அதிரடி மொபைல் களுக்குப் பெயர் பெற்றது. ரூ.4,450 விலையில் அருமையான குவெர்ட்டி போன் ஒன்றைத் தந்துள்ளது.
பார்ப்பதற்கு பிளாக் பெரி போன்களைப் போன்ற தோற்றத்துடன் இந்த போன் உள்ளது. அனைத்து மல்ட்டி மீடியா வசதிகளுடன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment